sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

கண்ணம்மா

/

நிழல் பேசும் நிஜம்

/

நிழல் பேசும் நிஜம்

/

நிழல் பேசும் நிஜம்

நிழல் பேசும் நிஜம்

நிழல் பேசும் நிஜம்


PUBLISHED ON : அக் 02, 2022

Google News

PUBLISHED ON : அக் 02, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முறிந்த கிளை பூக்குமா?

நான் சுந்தரி; பள்ளி நுாலகர். புற்றுநோய் பாதிப்பினால என்னால கர்ப்பம் தரிக்க முடியலை; 'மலடி'ன்னு திட்டினதால மன முறிவு; விவகாரத்து வாங்கிட்டேன். அதுக்கப்புறம் சக ஆசிரியர் விக்டர் உடனான நட்பு எனக்குள்ளே காதலா மாறுச்சு. ஆனா விக்டருக்கு லேகா டீச்சர் மேல விருப்பம். நான் விரும்பினது கிடைக்காததால மறுபடியும் மன முறிவு!

மனசுல ஒரு தவறான எண்ணம்; விக்டர் - லேகா உறவை புத்திசாலித்தனமா யோசிச்சு உடைச்சிட்டேன். 'நீ விவாகரத்தானவள்; புற்று பாதித்தவள்; அதனால விக்டர்கிட்டே இருந்து விலகிடு'ன்னு அவங்க அம்மா என்கிட்டே பொங்கினப்போ மறுபடியும் எனக்குள்ளே மன முறிவு. இந்த சூழல்ல, 'லேகா உடனான காதல் கசந்ததுக்கு நான் தான் காரணம்னு தெரிஞ்சுக்கிட்ட விக்டர் என்னை வெறுத்தார்; 'என் முகத்துல முழிக்க மாட்டேன்'னு கிளம்பிட்டார்; இதனால, பெரிய மன முறிவு!

விக்டரை எதிர்கொள்ள முடியலை; பணி மாறுதல் வாங்கிட்டு கிளம்பிட்டேன். ஒருநாள்... மனம் முழுக்க காதலோடு என் எதிர்ல விக்டர். என் செயலுக்காக ஒதுங்கின விக்டர் என்னை நேசிக்க எது காரணம்; 'என் செயலுக்கு பின்னால அன்பு மட்டுமே இருந்தது'ங்கிற உண்மையை அவர் மனம் உணர்ந்திருக்கு!

பூவைத் தேடி வண்டு வரும்; தகுதியான அன்பைத் தேடி தகுதியுள்ள அன்பு வரும்; முறிந்த கிளை பூக்கும்!

படம்: சுந்தரி கார்டன்ஸ் (மலையாளம்)








      Dinamalar
      Follow us