
நான் பத்ருன்னிசா!
ஏதோ டென்ஷன்ல என் புருஷன் என்னை அடிச்சிட்டா என்ன செய்வேன் தெரியுமா; முகத்தை இறுக்கமாக்கி சமையல் பாத்திரங்களை உருட்டுவேன். அவர் என் பின்னால வந்து என்னை அணைச்சுக்கிட்டு மன்னிப்பு கேட்டதும் கொஞ்சம் அலட்டல் பண்ணுவேன்; அப்படியே சிரிச்சிடுவேன்!
நல்லா குடிச்சிட்டு வந்து சாப்பிட உட்காருவார்; 'சாப்பாட்டுல கல் இருக்கு'ன்னு அவர் என்னை அடிப்பார்; அப்போ என்ன பண்ணுவேன் தெரியுமா; 'கோபமுள்ள இடத்துலதான் குணம் இருக்கும்; அன்பின் உரிமையில அடிக்கிறார்'னு சமாதானம் ஆயிருவேன்!
'புது வீடு வாங்கலாமே'ன்னு ஆலோசனை சொன்னப்போ, 'இந்தமாதிரி விஷயங்கள்ல நீ தலையிடாதே'ன்னு அவர் அடிச்சார். அந்த நிமிஷத்துல, 'ஒரு மனுஷியா கூட மதிக்க மாட்டேங்குறாரே'ன்னு வருத்தப்பட்டேன்.
இப்படி தேள் மாதிரி கொட்டுற புருஷனை என்ன செய்யலாம்; திருப்பி அடிக்கலாம் அல்லது கொடுக்கை வெட்டலாம்! இந்த இரண்டையுமே முயற்சி பண்ணிப் பார்த்தேன். ஆனாலும், எனக்குரிய மரியாதை கிடைக்கலை! எப்படி கிடைக்கும்?
'புருஷன் கை ஓங்குறப்போ அதை எதிர்க்கிறது மனைவியோட உரிமை'ங்கிற உணர்வே இல்லாம, என்னை நான் மதிக்காம இருந்துட்டேனே! இப்போ...
நான் திருப்பி அடிக்கலை; கொடுக்கை வெட்ட முயற்சி பண்ணலை; ஆனா... விலகி வந்துட்டேன்! ஏ ன்னா... என்னை நான் மதிக்க ஆரம்பிச்சிட்டேன்.
படம்: டார்லிங்ஸ் (ஹிந்தி)

