
அம்மா தையற் கலைஞர், அப்பா எலக்ட்ரீஷியன். பெற்றோரின் உழைப்புக்கு ஒவ்வொரு நாளும் அர்த்தம் தந்து கொண்டிருக்கும் இவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்; பாரம்பரிய சிலம்பம், மல்லர் கம்பம், வளரி, அடிமுறை, குத்துவரிசை விளையாட்டுகளில் சாதிப்பவர்.
யார் இவர்?
பெயர்: பு.கனிஷ்காவகுப்பு: 7ம் வகுப்புபள்ளி: இன்பேன்ட் ஜீசஸ்
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்பெற்றோர்: புண்ணியமூர்த்தி -
தீபிகாஅடையாளம்: சிலம்ப வீராங்கனை
கஷ்டம் - இதுக்கு என்ன அர்த்தம் கனிஷ்கா?
'கஷ்டப்படுறதுன்னா சந்தோஷத்தை இழக்குறது இல்ல; நமக்கு பிடிச்ச விஷயத்துல பயிற்சி எடுத்தல்'ங்கிறது என் புரிதல்! பயம், சந்தேகம், வலி எல்லாம் பயிற்சியாலதான் குணமாகும். 'கலாம்ஸ் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ்'ல என்னோட இரண்டு உலக சாதனைகள் இடம்பிடிச்சதுக்கும், மாவட்டம் தொடங்கி சர்வதேசம் வரை சிலம்பத்துல நான் சாதிச்சதுக்கும் ஒரே காரணம்... நான் இஷ்டப்பட்டு கஷ்டப்படுறேன்!
ஒரு பேரனுபவம்?
'தோல்விக்கு அப்புறம் உடனடியா ஆறுதல் கிடைச்சா எந்த பாடமும் கத்துக்க முடியாது'ன்னு என் பயிற்சியாளர் மேத்யூ சார் சொல்வார். என் தோல்வி சமயங்கள்ல அம்மா, அப்பாவை நான் தேடுறதில்லை.
எங்கள் கனிஷ்கா
'எங்கள் பள்ளியின் விளையாட்டு துாதுவர் கனிஷ்கா' என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம்!
- திருவேணி, ஆசிரியை.