
சென்னை, மேடவாக்கத்தில் இருக் கிறது ஈஷா கிராப்ட்ஸ். 2012ல் 100 சதுர அடியில் தேவகியின் கணவர் துவக்கிய இந்த விற்பனையகம், தற்போது 800 சதுர அடியில் இந்திய, இந்தோனேசிய கைவினைப் பொருட்களால் நிரம்பித் ததும்புகிறது.
கலையும் முதுமையும்
'மரம், களிமண், செராமிக், உலோக கலைப்பொருட்களை அதனதன் வரலாறோட நாங்க காட்சிப்படுத்துறோம்!
'மரமா, பாறையா, உலோகமா... என ஆச்சரியமூட்டும் வார்ப்பில் பாலிரெசின் புத்தர் சிலைகள், மார்பிள் மற்றும் செராமிக்கில் மூன்றடி உயர புத்தர் சிலைகள், பித்தளை/ செம்பு/ வெண்கலத்தினால் ஆன கடவுள் சிலைகள், கருங்காலி மர சுவாமி மண்டபம், வெட்டிவேர் பிள்ளையார், வாஸ்து யானை, நவதானியம் கொண்ட கண்ணாடி பிரமிடு, ருத்ராட்சை மரம்... இப்படி நிறைய சேகரிச்சிருக்கிறோம்!
'மர குங்குமச்சிமிழ், மரஜன்னல் கண்ணாடி, பித்தளை காற்றாடி, சூரிய ஒளிக்கேற்ப நேரம் கணிக்கும் திசைகாட்டி, ஆங்கிலேயர் காலத்து தொலைபேசி இதெல்லாம் இங்கே வர்றவங்களை நிச்சயம் ஆச்சரியப்படுத்தும்!
'உள்ளங்கையில அடங்குற எங்க சின்னஞ்சிறு சிலையும் தத்ரூபமா இருக்கும்! - இது, எல்லாருக்கும் நாங்க தர்ற உத்தரவாதம்' என்கிறார் தேவகி.
94442 03394
* சிறப்பு பொருள்: மரக்கிளைகளில் தவழும் மீன்தொட்டி - ரூ.1,650 முதல்