PUBLISHED ON : ஜூலை 07, 2024

* 'அவர் மீது சி.பி.ஐ., விசாரணை என்றால் மட்டும் சி.பி.ஐ., மேல் நம்பிக்கையின்றி விசாரணைக்கு தடை பெறும் பழனிசாமி, கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு சி.பி.ஐ., விசாரணை கேட்பது ஏன்'னு நம்ம முதல்வர் 'விவரமா விளக்கமா' கேட்டதும்தான், 'கள்ளச்சாராய விவகாரத்தை ஏன் சி.பி.ஐ., விசாரிக்கணும்'ங்கிற அவசியம் எனக்குப் புரிஞ்சது!
* 'அடிக்கடி அமைச்சரை சந்தித்து நினைவூட்டினால் மட்டுமே தொகுதி சம்பந்தமான கோரிக்கை நிறைவேறும்'னு அமைச்சர் துரைமுருகன் தர்ற அறிவுரை தமிழக எம்.எல்.ஏ.,க்களுக்கு மட்டும்தானா; ஏன் கேட்குறேன்னா... மாநில வளர்ச்சி கோரிக்கைகளுக்காக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி அடிக்கடி பிரதமரை சந்திக்கிறார்... அதான்!
* தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் அவர்களே... அது ஏன் நீங்க ஜெயிச்சவங்களை மட்டுமே தட்டிக் கொடுக்கணும்னு நினைக்கிறீங்க; 234 தொகுதிகள்ல 10ம் வகுப்பு, பிளஸ் 2 படிக்கிற மிகத்திறமையான ஏழை மாணவர்கள் ஆறு பேரை இப்பவே தேர்ந்தெடுத்து, இந்த கல்வியாண்டுல அவங்க சிறப்பா ஜெயிக்க உதவலாமே!
* 'குழாயில் நீர் வழிந்து கொண்டே இருக்கும்; குழாய்க்கு நேர்கீழே இருக்கும் பாத்திரத்தை நிரம்ப விடாமல் தடுக்க வேண்டும்'னு சொல்றது பெரும் அபத்தம்னா, 'குடிநோயாளிகள் மீட்பு என்பதை இயக்கமாகவே அரசு செயல்படுத்தி வருகிறது என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்'னு முதல்வர் சொன்னதை என்னன்னு நான் சொல்றது!