sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கண்ணம்மா

/

வானமே எல்லை

/

விடியும் வரை கிறுக்குவேன்

/

விடியும் வரை கிறுக்குவேன்

விடியும் வரை கிறுக்குவேன்

விடியும் வரை கிறுக்குவேன்


PUBLISHED ON : ஆக 18, 2024

Google News

PUBLISHED ON : ஆக 18, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆகஸ்ட் 13: 'அ.தி.மு.க.,வின் கடைசி ஓராண்டு ஆட்சியில் 1,695 கொலைகள்' என்று முதல்வர் தந்த புள்ளிவிபரம் மீது காதல் கொண்டேன்; 'மோடி ஆட்சியில் காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்கள் 69 சதவீதம் குறைவு' என்பதை கடந்து விட்டேன்!

ஆகஸ்ட் 14: 'நடிகர்களுக்கு அறிவு இருக்காது என்ற தி.மு.க., அமைச்சரின் பேச்சு உதயநிதியை கூட சுட்டுவதாக இருக்கலாம்' என்ற சீமானின் பேச்சு சுதந்திரத்தைக் காட்டிலும், உதயநிதியை நடிகர் என கொண்டாடிய அவரது ரசனை ஈர்க்கிறது!

ஆகஸ்ட் 15: 'மாணவ மாணவியரை சீண்டுபவருக்குதானே பயமூட்ட வேண்டும்' எனும் என் செழித்த சிந்தனையை அழித்து, 'போக்சோ சட்டம் குறித்த வீடியோ பள்ளி மாணவ மாணவியருக்கு திரையிடப்படுகிறது' என்பதில் மகிழ்ந்தேன்!

ஆகஸ்ட் 16: 'அரசுப்பணிக்கு தேர்வானவர்களை கொண்டாடுகையில், அவ்வெற்றியில் இட ஒதுக்கீட்டு சலுகையின் பங்கு பற்றி ஏன் சொல்ல மறுக்கின்றனர்' எனும் சிந்தனை, விழிப்புணர்வு தந்து விடும் என்பதால் அப்படி நான் சிந்திப்பதே இல்லை!

ஆகஸ்ட் 17: 'மெட்ரோ ரயில் பணிகளால் மழைநீர் வடிகால்களின் அடைப்பு' குறித்து ஆராய குழு அமைத்திருப்பதன் மூலம், 'இந்த ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்டால் மெட்ரோ ரயில் பணிதான் காரணம்' என்று ஏற்றுக் கொள்வேன்!






      Dinamalar
      Follow us