PUBLISHED ON : ஆக 25, 2024

ஆக.,13: 'தமிழகத்தில் போதை பொருட்களை வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன்' என முதல்வர் வாசிக்க உறுதிமொழி ஏற்ற பல்கலை மாணவர்கள், 'மது என்பது போதைப்பொருள் இல்லையா' என கேட்காததில் எனக்கு மனநிறைவு!
ஆக.,15: 'பட்டியல் இனத்தவர் முதல்வராக முடியாது' என்ற திருமாவின் பேச்சு, அன்னதானம் மறுக்கப்பட்ட நரிக்குறவ பெண்ணின் வீட்டில் உணவருந்தி 'சமூக நீதி' காத்த நம் முதல்வரின் காதுகளுக்கு கண்டிப்பாய் சென்றிருக்காது!
ஆக17: 'தமிழகத்தில் நில அபகரிப்பு, கொலைகள் அதிகரித்து வருகின்றன' என்று உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து சொல்லி இருப்பினும், 'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது' எனும் முதல்வரின் பேச்சையே நான் நம்புவேன்!
ஆக.,22: 'நான், என் மகன், பிறகு என் பேரன்' என்று நிறுவனம் போல் கட்சி நடத்தும் புனித குடும்பத்தில் அவதரிக்காத காரணமே, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை அரசியல் படிக்க இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கிறது!
ஆக.,24: 'கடவுள் நம்பிக்கை கொண்ட உலக மக்கள் நம்மைப் போல் முட்டாள்தனமாக கடவுளை நம்புவதில்லை' என்று ஈ.வெ.ரா., சொன்னதை, மு.க.ஸ்டாலின் அரசின் 'முத்தமிழ் முருகன் மாநாடு' என் மனதிலிருந்து ஊதி தள்ளிற்று!