sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கண்ணம்மா

/

வானமே எல்லை

/

விடியும் வரை கிறுக்குவேன்

/

விடியும் வரை கிறுக்குவேன்

விடியும் வரை கிறுக்குவேன்

விடியும் வரை கிறுக்குவேன்


PUBLISHED ON : செப் 29, 2024

Google News

PUBLISHED ON : செப் 29, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செப்டம்பர் 22: தமிழக உணவு பாதுகாப்பு துறையினரின் ஆய்வுகளில் தரமற்ற உணவுகள் கண்டறியப்பட்டு வரும் நிலையில், 'விலங்குகளின் கொழுப்பு கலந்த இனிப்புகள் தமிழகத்தில் கிடையாது' எனும் அரசின் உத்தரவாதத்தை நம்புகிறேன்!

செப்டம்பர் 23: 'சகோதரர் ராகுல் காந்தியை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவதும், நாளுக்குநாள் அவருக்கு கூடி வரும் பொதுமக்களின் ஆதரவும் பலரையும் மிரளச் செய்துள்ளன' எனும் நம் முதல்வரின் பதிவில் என் கண்கள் பனித்தன; இதயம் இனித்தது!

செப்டம்பர் 24: ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் கடந்த பின்னும், மக்கள் வரிப்பணத்தை மழைநீர் வடிகால் பணிகளுக்காக வாரியிறைத்த பின்னும், வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள மீட்பு சாதனங்களோடு தயாராக இருக்கும் எம் அரசு வாழ்க!

செப்டம்பர் 25: குற்றவாளி பயன்படுத்திய ஆயுதத்தை பறிமுதல் செய்யப் போகையில், மறைத்து வைத்திருக்கும் அந்த ஆயுதத்தால் குற்றவாளி தன்னை தாக்கக்கூடும் என்று சிந்திக்காத போலீஸ், 'என்கவுன்டர் போலீஸ்' அந்தஸ்து பெறுகிறார்!

செப்டம்பர் 26: 'வெறுப்பை அன்பால் மட்டுமே வெல்ல முடியும்' என்று ஜம்மு - காஷ்மீர் தேர்தல் பிரசாரத்தில் ஓங்கி ஒலிக்கும் ராகுல் காந்தியின் குரல்தான், விநாயகர் சதுர்த்திக்கான வாழ்த்து எதிர்பார்த்து ஏமாந்த தமிழக மனங்களுக்கு மிகச்சிறந்த மருந்து.






      Dinamalar
      Follow us