PUBLISHED ON : டிச 20, 2015
நம் நாட்டில், சில மாநிலங்களில், வனஸ்பதி, வெஜிடபிள் நெய் என விற்கப்படுகிறது. நுகர்வோர் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். 
இந்திய உணவு விடுதிகளில், நெய்க்கு பதிலாக, வனஸ்பதி (டால்டா, வெஜிடபிள் நெய் மற்றும் ஹைடிரஜினேட்டட் வெஜிடபிள் எண்ணெய்) விலை குறைவு என்பதால் பயன்படுத்தப்படுகிறது. வெஜிடபிள் நெய் என, விற்கப்படும் வனஸ்பதியில், டிரான்ஸ் கொழுப்பு என்ற பொருள் உள்ளது. 
இது, இதய ரத்தத் குழாய்கள் சம்பந்தப்பட்ட, நோய்கள் ஏற்பட வழி வகுக்கும். எனவே, வெஜிடபிள் நெய் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். ஒரு தனிமனிதன், ஒரு நாளில் பயன்படுத்த, பரிந்துரைக்கப்பட்ட கொழுப்பின் அளவு என்பது, 10 முதல் 15 கிராம் ஆகும். நீர் மற்றும் சூரிய ஒளி இரண்டுமே, நெய்யின் தன்மையை பாதிக்க கூடியவை. 
பாதுகாப்பு டிப்ஸ்: 
1. எப்போதும் நெய்யை நன்கு மூடி, சூரிய ஒளி இல்லாத இடத்தில் வைக்கவும். 
2. நெய் அடிக்கடி பயன்படுத்துவதாக இருந்தால், குளிர்சாதன பெட்டியில் வைக்காதீர்கள். 
3. வெப்பமான காற்றில் திறந்தீர்கள் என்றால், நீரானது நெய்யுடன் சேர்ந்து கெட்டு விட வாய்ப்புள்ளது. 
4. சுத்தமான கன்டெய்னரில், காற்று புகாதபடி அடைத்து வைத்தால், இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை, நெய் கெடாமல் இருக்கும். 
5. நெய் கன்டெய்னரை திறக்காமல், குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தால் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும். 
6. நல்ல முறையில் தயாரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட நெய், பல மாதங்கள் அறை வெப்ப நிலையில் கெடாமல் இருக்கும். 
7. நீண்ட நாள் பயன்பாட்டுக்கு, நெய்யை ஒளியே புகாத, கன்டெய்னரில் காற்று புகாதபடி, இறுக்கமாக மூடி, இருட்டான பகுதியில் பாதுகாத்து வைக்க வேண்டும். 

