தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஆரோக்கிய சிரிப்பு: பற்களின் மீது படிமம் உருவாக காரணம்

ஆரோக்கிய சிரிப்பு: பற்களின் மீது படிமம் உருவாக காரணம்

ஆரோக்கிய சிரிப்பு: பற்களின் மீது படிமம் உருவாக காரணம்


PUBLISHED ON : செப் 18, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 18, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

* சாப்பிட்ட பிறகு என் பற்களின் மீது அடிக்கடி பிசுபிசுப்பாக படிமம் உருவாகிறது. இது எதனால்?



நாம் உண்ணும் உணவு பொருட்கள் சரிவர பிரஷ் செய்யாவிட்டால் பற்களின் மீது பிசுபிசுப்பாக படியக் கூடும். இதனை 'பிளாக்' என்பர். நம் வாயில் சுரக்கும் உமிழ்நீர் இயற்கையாகவே இந்த உணவுப் படலத்தை சுத்தம் செய்துவிடும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி வாய் உலர்ந்து விடக் கூடும். மேலும் சில மாத்திரைகள், கதிர்வீச்சு சிகிச்சை ஆகியவை மேற்கொள்ளும்போதும் வாய் உலரக் கூடும். இதனால் படிமம் படியலாம். உமிழ் நீர் சுரப்பது சிலருக்கு குறைவாக இருக்கும். இவர்களுக்கு 'சலைவரி சப்ஸ்டிடியூட்ஸ்' உள்ளன. இதனை உபயோகப்படுத்தலாம்.

பல்துலக்கும்போது, மேல் பற்களை மேலிருந்து கீழாகவும், கீழ் பற்களை கீழிருந்து மேலாகவும் 'பிரஷால்' துலக்க வேண்டும். இவ்வாறு செய்தால்தான் ஈறுகளுக்கு அருகில் இருந்து அழுக்குகள் வெளியேறக் கூடும். அதிக நாட்கள் இதனை கவனிக்காவிட்டால் உமிழ்நீரில் உள்ள மினரல்களுடன் சேர்ந்து பற்காரை ஆகிவிடும். பின்னர் அதை பல் டாக்டரிடம் சென்று சுத்தம் செய்ய வேண்டும்.



* என் மகனுக்கு மூன்று வயது. பாதி பற்களுக்கு மேல் சொத்தையாக உள்ளது. அவை விழுந்து முளைக்கும்போதும் சொத்தையாகவே முளைக்குமா?



சிறு குழந்தைகள் இரவு நேரத்தில் பால் பாட்டிலை வாயில் வைத்தபடி உறங்குவது தவறு. இவ்வாறு செய்யும்போது அதிக நேரம் கிருமிகளின் தாக்குதலுக்கு பற்கள் உட்பட்டு சொத்தையாகிறது. அடிக்கடி இனிப்பு வகைகள் சாப்பிட்டு சரிவர பிரஷ் செய்யாவிட்டாலும் பற்சொத்தை உருவாகும். பால் பற்களாக இருப்பினும் பற்சொத்தையை சுத்தம் செய்து, அடைக்க வேண்டும். பற்சொத்தை ஆழமானால் வலி, வீக்கம் ஏற்படக் கூடும். கீழே இருக்கக் கூடிய நிரந்தர பற்களையும் பாதிக்கலாம். உடல் நலத்திற்கும் நல்லதல்ல. சிறு குழந்தைகளை பல் டாக்டரிடம் அழைத்துச் செல்லும்போது பயமுறுத்தக் கூடாது. முதல்தடவை பல் டாக்டர் குழந்தையுடன் பேசி, வாயில் உள்ள பிரச்னையை குறித்துக் கொள்கின்றனர். பின் குழந்தை முழு ஒத்துழைப்பு தந்தால் பல் ஆஸ்பத்திரியிலேயே பற்களை சுத்தம் செய்து அடைத்துவிடலாம். குழந்தைகள் அதிகம் முரண்டு பிடித்தாலோ, பற்சொத்தை ஆழமாக இருந்து சிகிச்சை செய்ய, அதிக நேரம் ஆகும் என்றால், அதிக பற்கள் சொத்தை என்றாலோ, மயக்க மருந்து அளித்து அனைத்து சிகிச்சையையும் ஒரே நேரத்தில் செய்துவிடலாம். ஒரு நாள் ஆஸ்பத்திரியில் தங்க நேரிடும். இச்சிகிச்சை அனைவருக்கும் பொருந்தாது. பல் டாக்டர், மயக்கவியல் நிபுணர் மற்றும் பெற்றோர் கலந்து ஆலோசிக்க வேண்டும்.



* கிளிப் அணிந்த பற்கள் சீராக வரிசைக்கு வந்த பின்பும் எதற்காக கழற்றி மாற்றுகிற கிளிப் அணிய வேண்டும்?



கிளிப் அணியும்போது பற்களின் மீதும், பல்வேறு கம்பிகள் மூலம் சீராக மிதமான அழுத்தம் அளிக்கப்படுகிறது. தங்கள் வேர்களுடன் தாடை எலும்பினும் அசைந்து வரிசைக்கு வருகிறது. தாடை எலும்பினுள் நகரும்போது, எலும்பு முன்பிருந்த நிலையில் கரைந்து பற்கள் நகரும் இடத்தில் புதிதாக உருவாகிறது. குறைந்தபட்சம் ஒன்றரை ஆண்டு இம்முறை தொடரும். பற்கள் சீரான பிறகும் கிளிப்பை கழற்றினாலும், பற்களின் வேர்பகுதியை சுற்றி எலும்பு முழுமையாக உருவாக சிறிது த்தில் கழற்றி மாற்றும் கிளிப் அணிந்தால் பற்கள் ஸ்திரமாக எலும்பினுள் அமைய பெறும். ஆகவே பல் சீரமைப்பு நிபுணர் இதை பரிந்துரைப்பார். இதை அணியும் காலத்தில் 3 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை 'செக் அப்' செய்தால் போதும்.



டாக்டர் எஸ்.முத்துராமன், மதுரை. 98430-61160.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us