தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மரணத்தில் முடிந்த... K எனும் மாய உலக பயணம்

மரணத்தில் முடிந்த... K எனும் மாய உலக பயணம்

மரணத்தில் முடிந்த... K எனும் மாய உலக பயணம்


PUBLISHED ON : பிப் 15, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 15, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த வாரம் 9வது மாடியில் இருந்து 12, 14,16 வயதுடைய மூன்று சகோதரிகள் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்தது.. ஒரு மாய உலகத்தை தேடிய பயணம் மரணத்தில் முடிந்த கதை அது. இந்த விபரீத முடிவுக்குக் காரணம்... கொரியன் சீரியல் போதை.

தற்கொலை செய்து கொண்ட சிறுமிகள் தங்களை மரியா, அலிசா என்று கொரியப் பெயர்களில் அழைத்து மகிழ்ந்துள்ளனர். நாள் முழுவதும் அதில் மூழ்கிய அவர்களை, பெற்றோர் திடீரென்று கண்டித்து மொபைல் போன்களை பிடுங்கியது, மனதளவில் பிரள்வை ஏற்படுத்தி இம்முடிவுக்கு தள்ளியுள்ளது.

உளவியல் ஆலோசகர் பிரதீபாவிடம் இது பற்றி பேசினோம்...

நம்மூர் சீரியல்களை போலன்றி கொரிய தொடர்கள் வேறுபட்டு உள்ளன. அதன் படப்பிடிப்புத்தரம், அழகான பொம்மை போன்ற முகங்கள், சொகுசான வாழ்க்கை முறை, பிரமாண்டமாக காட்டப்படும் காதல், எளிதான காமம் இன்றைய தலைமுறையினரை எளிதாக கட்டிப்போட்டு விடுகின்றன.

பிரமாண்டங்களை சிறு வயது முதலே பார்த்து பழகும் குழந்தைகளுக்கு, இன்றைய நிஜ உலக சாதாரண வாழ்க்கை பிடிக்காமல் போகிறது.

நம் வீடுகளிலும் இருக்கிறார்கள்!

நம் வீடுகளிலும் குழந்தைகள் மொபைல் போனில் மூழ்கி கிடக்கின்றனர். பெற்றோர் இதை ஓர் எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள வேண்டும். தொழில்நுட்பங்களுடன் இணைந்தே இனி நம் பயணம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், அவற்றின் அடிமைகளாகி விடக்கூடாது.

மொபைல் கேம், சீரியல் போன்றவற்றை பழக்கப்படுத்தி விட்டு திடீரென்று பறித்தால் குழந்தைகளால் ஏற்க முடியாது. மது பழக்கத்தில் இருந்து வெளிவர முடியாமல் தவிப்பவர்களின் கதை தான் இதுவும்.



என்ன செய்யலாம்?

* தற்போது மொபைல் போன்களை டி.வி.,களில் கனெக்ட் செய்ய முடியும் என்பதால், முடிந்தவரை மொபைல் போனை கையில் கொடுக்காமல், பெரிய திரையில் காணச்செய்யுங்கள்.

* குழந்தைகளை வீடுகளுக்குள் அடைத்து வைக்காமல், சக குழந்தைகளுடன் ஓடி, ஆடி விளையாட வாய்ப்புகளை கட்டாயம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

* நெட் பேக் போடும் போது, ஒரு நாளுக்கு ஒரு ஜி.பி. அளவு மிகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வீடுகளில் உள்ள 'அன்லிமிடெட் ஒய்-பை' தேவையில்லை எனில் துண்டித்து விடுங்கள்.

* ஸ்கிரீனில் என்ன பார்க்கின்றார்கள், அவர்களின் செயல்பாடுகளில் மாற்றங்கள் உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

* உணவில் எப்படிச் சர்க்கரையைக் குறைக்கிறோமோ, அதுபோல போன் பார்க்கும் நேரத்தைக் குறைக்க, 'டிஜிட்டல் டயட்' முறை அவசியம்.

இதுதான் அறிகுறிகள்

வழக்கத்தை காட்டிலும் அதிக கோபம், எதிர்த்து பேசுவது, தனிமையை விரும்புவது, சக குழந்தைகளுடன் ஒட்டாமல் இருந்தால், ஏதோ ஒரு அபாயத்தில் உள்ளார்கள் என புரிந்து அவர்களை அரவணைத்துக் கொள்ளுங்கள். நேரம் செலவிட்டு, மெள்ள டிஜிட்டல் அடிமைத்தனத்தில் இருந்து மீட்டெடுங்கள்.

வழக்கத்தை காட்டிலும் அதிக கோபம், எதிர்த்து பேசுவது, தனிமையை விரும்புவது, சக குழந்தைகளுடன் ஒட்டாமல் இருந்தால், ஏதோ ஒரு அபாயத்தில் உள்ளார்கள் என புரிந்து அவர்களை அரவணைத்துக் கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us