தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/நிதானமான நடைபயிற்சி

நிதானமான நடைபயிற்சி

நிதானமான நடைபயிற்சி


PUBLISHED ON : பிப் 21, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 21, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு, நடை பயிற்சி, நல்ல தீர்வை கொடுக்கும். சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு, மருத்துவர்கள் முதலில் பரிந்துரை செய்வது வாக்கிங் போங்க என்பது தான். நடைபயிற்சி செல்வது என்பது சாதாரணமானது. ஆனால், அதன் முழு பயன்களையும் முழுமையாக பின்பற்றுபவர்களுக்கே கிடைக்கிறது.

எப்போதும், வேலை, வேலை என்றிருப்பவர்களுக்கு, நடைபயிற்சி இல்லாமல் போகும். எப்போது, வீட்டுக்கு செல்லலாம் என்று தான் தோன்றும். வீட்டுக்கு சென்று விட்டால், உறங்குவதில் தான் நாட்டம் செல்லும்.

முதுகுவலி இருப்பவர்களும், நடக்க வேண்டும் என்று, மருத்துவர்கள் சொல்கின்றனர். மலை மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு, நடை தான் மிகப்பெரிய அருமருந்து. எப்படி நடக்க வேண்டும் என்று, பலருக்கு தெரியாமல், அன்றாடம் வாக்கிங் செல்கின்றனர்.

நாற்பது வயதானாலே, பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. அந்த வயதில் தான், பலரும் நடைபயிற்சி செய்கின்றனர். ஒரு மணி நேரம் தொடர்ந்து நடந்தால், முழுமையான பலன் கிடைக்கும். படிப்படியாக தூரத்தை அதிகரிக்க வேண்டும். முதலில், தினசரி இரண்டு கி.மீ. நடக்க ஆரம்பித்து, நிமிடத்துக்கு சுமார், 100 அடி எடுத்து வைத்து நடக்கலாம்.

பெண்களின் பாத அளவு, கால்களின் உயரம் குறைவாக இருப்பதால், அவர்கள் அதிக அடி எடுத்து வைத்து நடந்தால் தான், ஆண்களுக்கு இணையாக கடக்க முடியும். பயிற்சியின் போது, வியர்வையை உறிஞ்சக்கூடிய தளர்வான பருத்தி ஆடையை அணிந்து கொள்ள

வேண்டும். மூச்சு வாங்கும் அளவுக்கு, வேக நடை கூடாது. நேராக நிமிர்ந்து நடக்க வேண்டும்.

தோள் பட்டையை தளர்த்தி, கைகளை நன்றாக வீசி நடக்க வேண்டும். சாலைகளில் நடப்பதைவிட பூங்காக்கள், கடற்கரை, விளையாட்டு மைதானத்தில் நடப்பது, உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. நாற்பது வயதுக்கு மேலுள்ளவர்கள், இருதய நிபுணரின் ஆலோசனைப்

படி நடப்பது நல்லது.

தசை, மூட்டு தொந்தரவு இருந்தால், அதற்கு சிகிச்சை பெற்ற பின் நடக்கலாம். காலுக்கு பொருத்தமான, வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி ஷாக்ஸ், ஷூ அல்லது செருப்பு அணிந்து நடப்பது அவசியம். காலணியின் அடிப்பாகம், பாதத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், மென்மையாக இருக்கவேண்டும்.

ஷூ ஒரு பக்கம் தேய்ந்து, தொடர்ந்து நடக்கும் போது, மொத்த உடல் எடையும் ஒரு பக்கமாக சாயும். இதனால், கால் முட்டி, பாதத்தில் வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. குறுகிய வட்டத்துக்குள் நடப்பதை தவிர்ப்பதன் மூலம் இடுப்பு, முதுகு வலி வராமல் தடுக்கலாம்.

பனி, குளிர் காலத்தில் ஸ்வெட்டர், ஸ்கார்ப் அணிந்து வாக்கிங் செல்ல வேண்டும். வயதானவர்கள், மாடிப்படி ஏறி, இறங்குவதை தவிர்த்து, சமதளத்தில் நடப்பது நல்லது. நடப்பதற்கு என்று நேரத்தை ஒதுக்கி, இயற்கையான காற்றுக்கு மத்தியில் நடந்து, ஆழ சுவாசித்தால், உடலுக்கு நன்மை தானே.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us