தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - அருகில் பார்த்தால், தெளிவாய் தெரியும்!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - அருகில் பார்த்தால், தெளிவாய் தெரியும்!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - அருகில் பார்த்தால், தெளிவாய் தெரியும்!


PUBLISHED ON : ஜூன் 16, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 16, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வைட்டமின், 'ஏ' குறை பாட்டால், 'கார்னியா' எனப்படும் கருவிழி கோளாறுகளாலேயே, பெரும்பாலும் பார்வை இழப்பு ஏற்படுகிறது. இதனால், அதிகம் பாதிக்கப்படுவது, குழந்தைகள்.

சரியான ஊட்டச்சத்து கிடைக்காத குழந்தைகளுக்கு, 1 வயதிலிருந்தே, கருவிழியில் கோளாறு ஏற்படலாம். எனவே, ஒரு ஆண்டு முடிந்தவுடன், ஆண்டிற்கு ஒரு முறை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற தொற்றுகளால், கருவிழியில் ஏற்படும் ஆறாத வடு, பிறவி குறைபாடுகள், கண்களில் அடிபடுவது, ரசாயன கலவை கண்களில் படுவது போன்ற காரணங்களாலும் பார்வை இழப்பு வரலாம்.

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில், தாய்க்கு தொற்று ஏற்பட்டால், கருவில் உள்ள குழந்தையின் கார்னியா பாதித்து, பிறவி கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

முதல் முறையாக, கரும்பலகையில் எழுத்துகளை பார்க்கும் குழந்தை, மங்கலாக எழுத்துகள் தெரிந்தால், மற்ற குழந்தைகளுக்கும், இது போலவே தான் தெரியும் என்று நினைத்துக் கொள்ளும்.

பள்ளிகளில், கண் பரிசோதனை செய்யும் போது, இதை அனுபவத்தில் பார்த்திருக்கிறோம். பார்வை குறைபாடு இருப்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ற கண்ணாடி தரும் போது, குழந்தைகளின் செயல்பாடுகளே முற்றிலும் மாறி விடும். அது வரையிலும், பிரச்னை இருப்பதை அவர்களால் உணர முடியாது.

கவனிக்க வேண்டியவை...

எல்லாவற்றையும் கண்களின் அருகில் வைத்துப் பார்ப்பது, கரும்பலகையில் எழுதியவற்றை, முதல் வரிசையில் அமர்ந்தும் பார்க்க சிரமப்படுவது, கண்களைச் சுருக்கிப் பார்ப்பது, அடிக்கடி கசக்குவது போன்ற அறிகுறிகள் இருந்தால், பெற்றோர் கவனித்து, பரிசோதனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.

பெற்றோருக்கு பார்வை குறைபாடு இருப்பது, வெளியில் சென்று விளையாடாமல், 'ஐ - பேட், மொபைல் போன்' அதிக நேரம் பார்க்கும் குழந்தைகளுக்கு, கிட்டப் பார்வை வரும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

டாக்டர் பிரீத்தி நவீன், கண் மருத்துவர்,

அகர்வால் கண் மருத்துவமனை,

சென்னை.

99400 42812

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us