தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: பை - பாஸ் செய்தால் நல்லது!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: பை - பாஸ் செய்தால் நல்லது!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: பை - பாஸ் செய்தால் நல்லது!


PUBLISHED ON : ஜூலை 22, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 22, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடல் பருமனை, மருத்துவர்கள் எப்படி தீர்மானிக்கின்றனர் என்று கேட்டால், உயரத்தை, செ.மீ., அளவிலும், உடல் எடையை, கி.கி., அளவிலும் அளந்து, உடல் எடையை, உயரத்தால் வகுக்க வேண்டும். கிடைக்கும் விடையை, மீண்டும் உயரத்தால் வகுத்தால் கிடைப்பது,

'பி.எம்.ஐ., - பாடி மாஸ் இன்டெக்ஸ்' எனப்படும், உடல் பருமன் சுட்டு எண் கிடைக்கும்.

இந்தியர்களை பொறுத்தவரை, பி.எம்.ஐ., 32.5 மேல் இருந்து, நீரிழிவு, மூட்டு வலி, ரத்த அழுத்தம், சுவாசக் குறைபாடு, மூட்டு தேய்மானம் உட்பட, உடல் கோளாறுகள் ஒன்றோ, இரண்டோ இருந்தால், அவர்கள், 'மார்பிட் ஒபிசிட்டி' என்ற உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய, உடல் எடையுடன் இருக்கின்றனர் என்று அர்த்தம்; இவர்களுக்கு, உடல் எடையை குறைப்பதற்கான ஆப்பரேஷன் தேவைப்படும்.

உடல் பிரச்னையே இல்லாமல், 37.5க்கு அதிகமாக இருந்தாலும், 'மார்பிட் ஒபிசிட்டி' தான்; அவர்களுக்கும் ஆப்பரேஷன் தேவை. அதே நேரம், அதிகப்படியான உடல் எடையைக் குறைக்க, இவர்கள் பின்பற்றிய எந்த முறையும் பலன் தரவில்லை எனில் மட்டுமே, ஆப்பரேஷன் செய்ய வேண்டும்.

இரைப்பையின் அளவை குறைக்கும் போது, சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வாழ்நாள் முழுவதும், சில வைட்டமின் மாத்திரைகளை சாப்பிட வேண்டியிருக்கும்; தினமும் சாப்பிடுவதால், எந்தப் பிரச்னையும் வராது.

இந்த வகை ஆப்பரேஷன் என்பது, சில விஷயங்களை தவிர்க்க, பயணத்தின் போது, ஒரு ஊருக்குள் செல்லாமல், பை - பாஸ் ரோடு வழியே செல்வது போல் ஆகும்.

ஊருக்குள் சென்றால் கிடைக்கக் கூடிய பல விஷயங்கள் கிடைக்காது என்றாலும், அவசியமான நன்மைகள் கிடைப்பதை போன்றது.

குறைக்க முடியாத எடை குறையும்; சர்க்கரை கட்டுக்குள் வரும்; பலருக்கு சர்க்கரையே இல்லாமல், சாதாரணமாகி விடும்; ரத்தக் கொதிப்பு சரியாகலாம்.

இரைப்பையின் அளவை குறைக்கும் போது, பசியை துாண்டக் கூடிய நரம்புகள் நீக்கப்படுவதால், 80 சதவீதம் பசி உணர்வே இருக்காது. 20 சதவீதம் பசி நரம்புகள் குடலில் உள்ளது. பசியை கட்டுப்படுத்தும் போது, பலன் உண்டு.

உடல் பருமன் ஆப்பரேஷனில் பல வகைகள் உள்ளன. எந்த மாதிரியான அறுவை சிகிச்சை, குறிப்பிட்ட நோயாளிக்கு பொருந்தும் என்பதை, சரியாக முடிவு செய்தால், உடல் பருமன் குறைப்பு அறுவை சிகிச்சையால் எந்த பிரச்னையும் வராது.

டாக்டர் எஸ்.ஜெகதீஷ் சந்திர போஸ்,

உடல் பருமன் குறைப்பு மற்றும் சர்க்கரை நோய் நீக்கு சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர், மதுரை.

key2obesity@gmail.com


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us