தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/டாக்டரின் டைரி குறிப்பு

டாக்டரின் டைரி குறிப்பு

டாக்டரின் டைரி குறிப்பு


PUBLISHED ON : ஆக 31, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 31, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூன் 30, 2016:

ஜோசப்பும், ஷீலாவும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்; விரைவில் திருமணம். ஒரு மாதத்திற்கு முன்பு, ஜோசப்பிற்கு பிடித்த சினிமா நடிகரின் படம் வெளியானது. முதல் நாள், முதல் ஷோவிற்கு டிக்கெட் எடுத்து விட்டான். தியேட்டர் துாரத்தில் உள்ளது. இவன் கிளம்பவே சற்று தாமதமாகிவிட்டது. இதில் ஷீலாவையும் அழைத்துக் கொண்டு, அவனது 150 சிசி டூ வீலரில் 100 கி.மீ., வேகத்தில், படம் ஆரம்பித்துவிடுமே என்ற பதற்றத்தில், மெயின் ரோட்டைத் தவிர்த்து, சந்து பொந்துகளில் நுழைந்து, குறுக்கு வழியில் சென்றான். ஒரு தெருவில் திரும்பும்போது, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், அங்கே விளையாடிக் கொண்டு இருந்த குழந்தையின் மேல் ஏற்றிவிட்டான். தெருவே கூடி இவனை அடிக்க ஆரம்பித்துவிட்டது. குழந்தை மீனாவை துாக்கிக் கொண்டு, எங்கள் மருத்துவமனைக்கு வந்தனர். மீனாவின் பெற்றோரைத் தாண்டி, ஜோசப்பே பேசினான். 'குழந்தையை கவனிக்காதது என் தவறுதான். எப்படியாவது காப்பாற்றுங்கள்' என்றான். குழந்தைக்கு கை, கால்களிலும் மார்புக்கூட்டிலும் லேசான எலும்பு முறிவுடன், சிராய்ப்புகள் இருந்தன. அதோடு ரத்த அழுத்தம் குறைவாகவும், இதய துடிப்பு அதிகமாகவும் இருந்தது.

ஜோசப்பிடம் விசாரித்தேன்; குழந்தை எந்தப் பக்கம் விழுந்தாள் என்று. 'நான் வண்டியை வலதுபுறம் திருப்பும்போதுதான் இடித்தேன். எனவே இவள் வலதுபுறமாகத் தான் விழுந்தாள்' என்றான். உடனே சி.டி., ஸ்கேன் பரிசோதனை செய்யச் சொன்னேன். அதன் முடிவைப் பார்த்து, எனக்கு ஆச்சர்யம் இல்லை. காரணம் நான் சந்தேகப்பட்டது சரியே. வலது பக்கமாக கீழே விழுந்ததால், மார்புக்கூட்டில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட அதிர்வில், கல்லீரலிலிருந்து ரத்தம் உள்ளேயே கசிய ஆரம்பித்துவிட்டது. அறுவை சிகிச்சை செய்யாமல், கல்லீரலிலிருந்து வெளியேறும்

ரத்தத்தை தடுக்க, இண்டர்வென்ஷனல் கதிர்வீச்சு மூலம் இடுப்பெலும்பின் மேலுள்ள ரத்த நாளம் வழியாக வயரைச் செலுத்தி, அதில் உலோக காயில்களை (metal coils) பயன்படுத்தி, ரத்தம் வெளியேறுவதை சரி செய்தேன். இதனால், கல்லீரலில் ஏற்பட்ட உள் உறுப்புக்குள்ளேயே ரத்தம் வெளியேறுவது (internal bleeding) தடுக்கப்பட்டது. குழந்தை மீனாவின் உயிரும் காப்பாற்றப்பட்டது. ஜோசப்பை அழைத்து, 'வேகம் விவேகம் அல்ல; உன் அவசரத்தினால் ஒரு குழந்தையின் உயிர் போயிருக்கும்; இனியாவது கவனமாக இரு' என்றேன். கண்டிப்பாக என்றான் கண்ணீரோடு.

தி. தீபா

ஸ்ரீ இண்டர்வென்ஷனல் கதிர்வீச்சு நிபுணர். சென்னை.

98404 34365

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us