தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/டாக்டரின் டைரி குறிப்பு

டாக்டரின் டைரி குறிப்பு

டாக்டரின் டைரி குறிப்பு


PUBLISHED ON : அக் 12, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 12, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மே, 5, 2016

பொறியியல் கல்லூரி மாணவியான இந்து, வழக்கம்போல கல்லூரிக்கு கிளம்பியபோது, கால் பாதத்தில் வலி எடுக்க ஆரம்பித்தது. குறையவே இல்லை.

பல மாதங்கள் வலியை சமாளித்தவர், இனி தாங்க முடியாது என்ற நிலையில், என்னை சந்திக்க வந்திருந்தார்.

பாதத்தை பரிசோதிக்க, செருப்பை கழற்ற சொன்னபோது கவனித்தேன்.

'பாயிண்டெட் ஹீல்ஸ்' எனப்படும் கூர்மையான உயரம் அதிகமுள்ள காலணியை அணிந்திருந்தார். சட்டென அவரது பிரச்னையை புரிந்து கொண்டேன்.

'எப்போதும் இதுபோன்ற காலணிகளைத்தான் அணிவீர்களா?' என்றேன். 'ஆமாம்' என்றார். சில மருத்துவ பரிசோதனைகள் செய்ததில், அவருக்கு பாதத்தின் அடியில், தோலின் அடர்த்தி அதிகமாகவும், மெல்லிய தசைநார்கள் கிழிந்தும் இருந்தன.

சாதாரண காலணிகளை அணியும்போது இருப்பதைக் காட்டிலும், 'ஹை ஹீல்ஸ்' அணியும்போது, கவர்ச்சியாகத் தெரிவதால், இதை அணிய விரும்புவதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர். பெரும்பாலும் இவ்வகை காலணிகள், பாதவலி, சுளுக்கு, டெண்டினோபதி, முதுகுவலி போன்ற பாதிப்புகளை உண்டாக்குகின்றன.

காலின் அடிப்பகுதியில், 'ஆர்ச்' போன்ற வளைவான பகுதி உள்ளது. இதுதான் நிற்க, நடக்க உதவுகிறது. மேலும் கால் பகுதியை, முக்கோண வடிவில் பிரிக்கலாம். ஒரு முனை கட்டைவிரல்; மறு முனை கடைசி சிறு விரல்கள்; மூன்றாவது முனை குதிகால் பகுதி (கல்கேனியம்). கெண்டைக் கால் பகுதி தசை, குதிகால் எலும்பில் வந்து சேருகிறது.

'ஹை ஹீல்ஸ்' போடும்போது, முன்னங்காலில் மட்டுமே நிற்க வேண்டி வரும். இதனால், கால்களின் முக்கோண அமைப்பில் பாதிப்பு ஏற்படுகிறது.

மேலும், உடலின் மொத்த எடையையும் கால்கள் தான் தாங்குகின்றன. கால்கள் தரையில் சமமாக இருக்க வேண்டும். இதில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டாலும், முதுகு வலி, காலில் சுளுக்கு, கால் ஆணி, சின்ன சின்ன தசைநார் கிழிவு, கால் கட்டை விரலில் வலி ஏற்பட்டு, பிரச்னை ஏற்படலாம்.

ஹீல்ஸ் காலணிகளை அணியும்போது, குதிகால்கள் மேல்தூக்கி இருக்கும், இதைச் சமாளிக்க, நம்மை அறியாமலே குனிவோம். இதனால் உடலைத்

நேராகத் தாங்கி பிடிக்கும் தண்டுவடத்தில், பாதிப்பு ஏற்படலாம்.

வலிகளை குறைக்க, இந்துவிற்கு பிசியோதெரபி பயிற்சிகளை செய்யச் சொன்னேன். சில வாரங்களில் பிரச்னை எதுவும் இல்லை என்றவர், 'ஹை ஹீல்ஸ்' அணிவதில்லை என்றார்.

இரா. செந்தில்வேலன்

எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்.

95662 22533


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us