தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/அசர வைக்கும் அரச மரம்

அசர வைக்கும் அரச மரம்

அசர வைக்கும் அரச மரம்


PUBLISHED ON : ஜூலை 12, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 12, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரச மரத்தின் காற்று, கர்ப்பத்தையே பலப்படுத்தக்கூடிய அளவுக்கு, மருத்துவ சிறப்பு பெற்றது. அரச மரத்தில், பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல் உள்ளது. அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை, மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக்

கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது.

அரச பழத்தை பதப்படுத்தி, உண்டால், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். நம்முடைய மூதாதையர்கள், முன்னோர்கள்

மருத்துவ குணங்களை சூசகமாக சொல்லிச் சென்றிருக்கிறார்களே தவிர, அறிவியல் ரீதியாக சொல்லாமல் சென்று விட்டார்கள்.

அதனால் பாதியில் வந்தவர்கள், இதெல்லாம் மூட நம்பிக்கை, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இதையே, சிகாகோவில் இருக்கக் கூடிய பல்கலைக்கழகம், அரச மர இலையில் இவ்வளவு வீரியம் இருக்கிறது, அந்த மரத்திற்கு கீழ் உட்கார்ந்து அரை மணி நேரம் சுவாசித்தால் இத்தனை கலோரிகள் கிடைக்கிறது என, சொன்னால் அனைவரும் நம்புவர்.

அதனால்தான், அரச, வேம்பு மரங்களை பராமரிப்பது என்பது, பரிகாரம் போன்றது என்று அறிவுறுத்தி வருகிறது. நான்கு அரச மரங்களின் கீழ், நான்கு பேர் உட்கார்ந்து மருத்துவ குணம் பெற்று, உடல் நலம் தேறிச் செல்கிறார் என்றால், அந்தப் புண்ணியம் அந்த மரத்தை நட்டவரை போய்ச் சேரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us