தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/அகத்தியில் ஆயிரம் மகிமை!

அகத்தியில் ஆயிரம் மகிமை!

அகத்தியில் ஆயிரம் மகிமை!


PUBLISHED ON : மே 24, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 24, 2015


Follow on Google
அ நிறம் | அளவு

பத்து டம்ளர் பாலிலும், ஐந்து முட்டையிலும் உள்ள சுண்ணாம்புச் சத்து, ஒரு கட்டு அகத்திக்கீரையில் உள்ளது. முதலில் உள்ள இரு பொருட்களின் விலையோ அதிகம். கீரையின் விலையோ குறைவு. அகத்திக்கீரை சாப்பிட்டால், பால் வளம் பெருகும் என்பதால் தான், ஆடு, பசு போன்ற கால்நடைகளுக்குத் தீவனமாக அளிக்கப்படுகிறது.

பிரசவித்த தாய்மார்களுக்கு, அகத்திக்கீரை துவட்டல் தரப்படுவதன் நோக்கமும் இதே தான். எலும்பும், பல்லும் உறுதியாக இருக்கும். தாய்ப்பால் பெருகும், சோகை ஏற்படாது. மூளை மந்தமாக உள்ளவர்கள், இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், பலன் கிடைக்கும். பள்ளிக் குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறையாவது அகத்திக்கீரையை பொறியல் செய்து தந்தால், நல்ல மூளை வளர்ச்சியும், உறுதியான எலும்பும் பெற்று புத்திசாலியாகவும், பலசாலியாகவும் விளங்குவார்கள்.

மூக்கில் நீர் கொட்டுதல், மூக்கு அடைத்தல், தொண்டையில் கரகரப்பு, இலேசான தலைவலி இருந்தால், அகத்திக்கீரையை சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும். அகத்திக்கீரையை நன்றாகக் கழுவி மிக்ஸியில் அரைத்து, இரண்டு சொட்டு சாறை பஞ்சில் நனைத்து, மூக்கில் விட்டுக் கொண்டு, பத்து நிமிடம் கண் மூடிப்படுத்தால், மூக்கடைப்பும், மூக்கு ஒழுகுவதும் நீங்கும். முக்கியமான விஷயம், உடலின் உஷ்ணத்தை தணித்து ஒழுங்குபடுத்தி குளிர்ச்சியை ஏற்படுத்தும். அதிக சூட்டினால் அவதிப்படுபவர்கள் அகத்திக்கீரையை அவசியம் சாப்பிட வேண்டும். அடிபட்ட வீக்கங்களுக்கு அகத்திக் கீரை தான் அருமருந்து. அகத்திக்கீரையை வாணலியிலிட்டு வதக்கிப் பொறுக்கக்கூடிய உஷ்ணத்தில் எடுத்து கசக்கிப் பற்றுப்போட வீக்கமும், வலியும் தணியும்.

தினமும், வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் இளமோரில் ஒரு கரண்டி அகத்திக்கீரை பொடியைக் கலந்து குடித்தால், பித்தம் குறைந்து விடும். இளநரை, பாத வெடிப்பு, பொடுகு, குமட்டல், வாந்தி, கண் எரிச்சல், தலை சுற்றல், அஜீரணம் போன்ற கோளாறுகள் உடனடியாக விலகிக் கொள்ளும். அகத்திப்பூவை பாசிப்பயறுடன் சேர்த்து கூட்டு போல் சமைத்துச் சாப்பிட்டால், இருதயத்துக்கு பலம் கூடும். பாசிப்பருப்பை மலர வேக வைத்துக் கொண்டு, அகத்திக்கீரையைப் பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்த்து வேக வைக்கவும்.

உப்பு, மிளகாய், தேங்காய் துருவல், பெருங்காயம் போன்றவை சுவைக்கத் தகுந்த அளவு, இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், தொண்டை ரணம் ஆறும், தொண்டை வலி குணமாகும், நல்ல பசி எடுக்கும். அகத்திக் கீரையின் சிறப்பு அம்சமே அதன் கசப்பும், துவர்ப்பும் கலந்தவை தான். நமது உடலில் உள்ள விஷநீர் எத்தகைய தன்மை உடையதாக இருந்தாலும், முதலில் வெளியேற்றிவிடும். குடலில் குடியிருக்கும் குடல் புழுக்களைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும். மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளும். இது நடைபெற்றால், மற்றதெல்லாம் சாதாரணம். உடல் உரம் பெற்று ஆரோக்கியமாகும்.

சாதாரண மக்களும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியது அகத்திக்கீரை. இதில் வைட்டமின் ஏ மற்றும் சி மிகுதியாக உள்ளது. இக்கீரையில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் பாஸ்பரஸ் போன்றவையும் மிகுதியாக உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us