தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மாம்பழத்தின் தோலை வீசாதீர்

மாம்பழத்தின் தோலை வீசாதீர்

மாம்பழத்தின் தோலை வீசாதீர்


PUBLISHED ON : ஆக 09, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 09, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரபரப்பான சமூகத்தில், கீரைகள், பழங்கள் சாப்பிடுவதை விட, பாஸ்ட்புட் உணவுகளை உட்கொள்வதிலேயே, மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படியே சாப்பிட்டாலும், சிலர் செலக்டிவாக பழம், காய்கறிகளை உண்ணும் பழக்கம் உண்டு.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான பழங்களில், மாம்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், சூடு, அதிகமாக சாப்பிட்டால், உஷ்ணம் ஏற்படும் என, ஒதுக்குவதும் உண்டு. மாம்பழத்தில், 100 கிராமில், 12.2 முதல், 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல், 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால், இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை

தூர எறிந்து விடுவர்.

மாம்பழத்தின் தோல் பகுதியில் தான், வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவை, நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது.

வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை, நாம் அறிவோம். இதே போன்றே, மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதால், வெண்ணெயை உண்பதைவிட மாம்பழத்தை உண்ணலாம்.

அதிகமாக சாறும், நாறும் உள்ள பழங்களில் இருந்து பழச்சாறு, ஒருவகை சட்னி, பழ ஊறுகாய், ஜாம் ஆகியவையும் தயாரிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us