PUBLISHED ON : செப் 02, 2015

சர்வ அங்க ஆசனம்; இந்த ஆசனத்தில், உடலில் உள்ள சர்வ அங்கங்களும் இயங்குவதால் இப்பெயர் வந்தது. ஆசனங்களின் ராணி என்று, இந்த ஆசனத்தை சொல்வதுண்டு.
செய்முறை: விரிப்பில் நிமிர்ந்து படுக்கவும். கைகளை உடலோடு ஒட்டிய நிலையில் தரையில் உள்ளங்கை படுமாறு வைக்கவும். கைகளை அழுத்தியவாறு மூச்சை இழுத்துக் கொண்டே கால்களை மேலே தூக்கவும். இப்போது இரண்டு கைகளால் முதுகை தாங்கி பிடிக்கவும். கண்கள் கால் விரல்களை பார்க்கவும், பாத விரல்கள் மேல் நோக்கி இருக்கவும் சிறிது நேரம் ஆழ்ந்த சுவாசத்தில் இருந்து பின் மூச்சை விட்டுக் கொண்டே மெதுவாக கால்களை கீழே இறக்கவும். இதே போன்று இரண்டு முறை செய்யவும். பின், சிறிது ஆழ்ந்த சுவாசத்தில் இருக்கவும்.
பலன்கள்:
1. உடம்பிலுள்ள நாளமில்லா சுரப்பிகள் நல்ல முறையில் இயங்குகின்றன. தைராய்டு சுரப்பியை சரியான அளவு சுரக்கச் செய்கிறது.
2. மூளைக்கு ரத்த ஓட்டம் பாய்வதால் முகம் அழகு பெறுகிறது.
3. தலைமுடி உதிராது. கண்கள் பொலிவு பெறும்.
குறிப்பு: ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும். கழுத்து வலியுள்ளவர்கள் தகுந்த யோகாசன ஆசிரியரை கலந்தாலோசித்த பின் செய்யவும். இந்த ஆசனத்தை செய்து முடித்ததும், மாற்று ஆசனமாக மச்சாசனத்தை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
ரா.சுதாகர், திருமூலர் பிரபஞ்ச யோகா மையம்,
சென்னை.
போன்:97909 11053
