தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/உணர்வுகளின் இருப்பிடம் வயிறு!

உணர்வுகளின் இருப்பிடம் வயிறு!

உணர்வுகளின் இருப்பிடம் வயிறு!


PUBLISHED ON : ஜூன் 14, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 14, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான அளவு உணவு சாப்பிட்டு இருக்கிறோமோ, என்பதை நம் மூளைக்கு சொல்வது லெப்ட்டின் என்ற ஹார்மோன்.இந்த ஹார்மோன் சுரக்காமல், வயிறு நிறைந்த உணர்வே இல்லாமல், சாப்பிட்டு கொண்டே இருப்போம்.

சாப்பிடும் உணவு ஜீரண நீரில் கரைத்து, செரிமானம் ஆகும் போது, தேவையான அளவு உணவு சாப்பிட்டு இருக்கிறோமா அல்லது இன்னும் சாப்பிட வேண்டுமா என்பதை இந்த ஹார்மோன் சுரப்பு மூளைக்கு சொல்லும்.

இதய கோளாறு

அதற்கு ஏற்றாற் போல, சாப்பிடும் உணர்வு நமக்கு ஏற்படும். சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரையை உணவில் சேர்க்கும் போது, அவை வயிற்றில் சுரக்கும் ஜீர அமிலத்தால் செரிக்கப்படுவதில்லை. மாறாக நேரிடையாக ரத்தத்தில் கலந்து ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்கிறது. இதற்கு காரணம், வெள்ளை சர்க்கரையில் எம்பட்டி கலோரி எனப்படும், எந்த சத்தும் இல்லாத வெறும் கலோரி மட்டுமே. கார்பனேடெட் பானங்கள் எனப்படும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களில், வெள்ளை சர்க்கரை மட்டுமே கலந்து உள்ளது. அதே போன்று, பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் செயற்கை சர்க்கரை அதிகம். இதனால் தான், நம் வயிற்றின் கொள்ளளவான, 800 மில்லி முதல் ஒரு லிட்ட ரை விட, அதிக கலோரி உள்ள பர்கர் சாப்பிட்ட பின், 600 மில்லி அளவு சோடா கலந்த குளிர்பானம் குடித்தாலும், லெப்டின் ஹார்மோன் சுரந்து கூடுதல் கலோரி வயிற்றில் இருக்கிறது என்று எச்சரிப்பதில்லை.

இதனால், தேவையற்ற கொழுப்பு உடல் பருமன், இதய கோளாறுகள் போன்ற பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. சர்க்கரை உணவில் சேர்த்து கொள்ளும் போது, அடுத்த இரண்டு மணி நேரம் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் நேரத்தில் நோய் எதிர்ப்பு செல்களின் திறன் குறையும். அதனால் வெள்ளை சர்க்கரை சாப்பிடும் போது, அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

தேன்

சுத்திகரிக்கப்படாத, இயற்கை சர்க்கரையில் இந்த பிரச்னை இல்லை. காரம், இனிப்பு மூலக்கூறுகள் இதில் இருந்தாலும், அத்துடன் சில வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து நுண்ணுாட்ட சத்துக்கள் உள்ளன.

இனிப்பு தேவைப்படும் நேரத்தில், தேன் சாப்பிடலாம். இது ரத்த சர்க்கரையின் அளவை சீராக அதிகரிக்க செய்யும். ஜீரண நீரில் செரிமானம் ஆகும். நாம் சாப்பிடும் உணவு என்ன விதமான மாற்றத்தை ஏற்படுத்தியது என்று தெரியாமல் இருக்கிறோம்.

சாப்பிட கூடாதவை சாப்பிட்டு வயிறை மாசு படுத்துவது, நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதோடு, ஆரோக்கியமான உணர்வுகளுடன் சகமனிதர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் போகிறது. காரம் உணர்வுகளின் இருப்பிடம் நம் வயிறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

டாக்டர் சந்தோஷ ஜேக்கப்

பொதுநல மருத்துவ ஆலோசகர்

சென்னை

9940493666

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us