PUBLISHED ON : மே 11, 2014

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுந்தரம், திருநெல்வேலி: காற்று மாசு எவ்விதத்தில் நுரையீரலை தாக்குகிறது?
காற்றில் உள்ள தூசி, மூக்கில் நுழையும்போது, கண்ணுக்குத் தெரியாத வகையிலானவை, மூக்கில் சுரக்கும் நீரையும் தாண்டி, நுரையீரலை அடைந்து, அங்கு சேர்ந்து விடுகின்றன. இதனால் நுரையீரலின் அளவும், திறனும் குறைகிறது. மேலும், இந்த தூசி, ரத்தத்திலும் கலக்கிறது. சில ரசாயன துகள்கள், ரத்தத்தில் கலக்கும்போது, குழந்தைப் பிறப்பு முதல், நோய் எதிர்ப்புத் திறன் குறைதல் வரையிலான பிரச்னைகளை உருவாக்கி விடுகின்றன.

