PUBLISHED ON : நவ 06, 2011

சிலர் சாதாரணமா இருப்பாங்க. திடீர்னு முகத்துல ஷாக் அடிக்கிற மாதிரியான ஒரு வலி வரும். அந்த நோய்க்கு பெயர், 'ட்ரைஜனமியல் நியூராலஜியா' பாதிக்கப்பட்டவங்க துடிச்சுப் போயிடுவாங்க. சில நரம்புகள்ல பிரச்னை ஏற்பட்டா அந்த வலி வரும். அதை எங்க சிகிச்சையில குணப்படுத்தலாம்.
ஒரு ஆங்கில நாளிதழ் சமீபத்தில், ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டிருந்தது. அதன்படி, இந்தியாவில் அதிகம் பேர் பாதிப்புக்குள்ளாகும் நோய், புற்றுநோயோ, நீரிழிவு நோயோ, எயிட்சோ கிடையாது. 'ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்' என்று சொல்லப்படுகிற மூட்டுவலி. இதை அனுபவித்தவர்களுக்குத் தான், அதன் தீவிரம் தெரியும். இந்த வலியை நீக்க முடியுமா?
'அல்ஜியாட்ரி' என்ற, வலி நிவாரண சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரபு திலக் சொல்வதைக் கேளுங்கள்: 'உண்மைதான். இப்போ இந்தியாவுல மூட்டு வலியால பாதிக்கப்படுறவங்கதான் அதிகம். எங்க கிட்ட வர்ற நோயாளிகளில் பெரும்பாலானோர், மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் தான். 'ஓசோன் தெரபி'ன்னு ஒண்ணு இருக்கு.'ஆக்சிஜன்'ங்கறது அறிவியல் படி O2. 'ஓசோன்'ங்கறது O3. ஆக்சிஜனை ஓசோனாக மாத்தி, அதை சில பிரச்னைகளுக்கு தீர்வாக தர முடியும். ஓசோனை ஊசி மூலமா போட்டா, வலி போயிடும். குறைந்தது மூணு, நாலு ஆண்டுக்காவது வலி இருக்காது. சில பேருக்கு வலி வரலாம். மறுபடியும் ஊசி போட வேண்டி வரும். பெரும்பாலும், மூட்டுவலி முற்றிலும் குணமாகிறதுக்கு என்ன செய்யணுமோ, அதையும் நாங்க இந்தத் துறையில செஞ்சுக்கிட்டு இருக்கோம். அலோபதி மருத்துவத்தில், மூட்டு வலிக்கு ஏற்கனவே ஒருவித சிகிச்சை இருக்கிறது. ஆரம்பத்தில் மருந்து, மாத்திரை கொடுத்து பார்ப்பர். பிறகு பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக் கொள்ளச் சொல்வர்.
இவையெல்லாம் செய்தும், குணப்படுத்தவே முடியாத நோயாளிகளுக்கு, அறுவை சிகிச்சை செய்வர். அதற்குப் பெயர் Total Knee Replacement. முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்குக் கூட, இந்த சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின், நோயாளிகளுக்கு மூட்டு வலி இருக்காது. ஆனால், நடக்கும்போது சரியாக நடக்க முடியாது. ரோபோ மாதிரி தான் நடக்க வேண்டியிருக்கும். சிலர் சாதாரணமா இருப்பாங்க. திடீர்னு முகத்துல ஷாக் அடிக்கிற மாதிரியான ஒரு வலி வரும். அந்த நோய்க்கு பெயர், 'ட்ரைஜனமியல் நியூராலஜியா' பாதிக்கப்பட்டவங்க துடிச்சுப் போயிடுவாங்க. சில நரம்புகள்ல பிரச்னை ஏற்பட்டா அந்த வலி வரும். அதை எங்க சிகிச்சையில குணப்படுத்தலாம்.சிலருக்கு அடிக்கடி கை, கால்கள் மரத்துப் போகும். தாங்க முடியாத தலைவலி இருக்கும். எப்ப பாத்தாலும் உடம்பு அசதியாகவே இருக்கும். ஞாபக மறதி ஏற்படும்.
இந்த நோயை ஆங்கிலத்தில் Fibronyalgia ன்னு சொல்லுவாங்க. இது, ஆண்களை விட பெண்களை அதிகமாகத் தாக்குற நோய். மருந்துக் கடைக்குப் போறப்போ, இந்த மாதிரி பெண்களைப் பாக்கலாம். யாரோ ஒரு பெண், 'கை, கால் குடைச்சல். ஏதாவது மாத்திரை குடுங்க'ன்னு கேட்டுக்கிட்டு இருப்பாங்க. அந்தப் பெண்ணைப் பார்த்தா, வலியால் அவதிப்படுவது போல் தெரியாது. யாரிடமாவது சொன்னால், அவர்கள் நம்பக் கூட மாட்டார்கள். ஆனா, அந்தப் பெண் வலியால கடுமையா பாதிக்கப்பட்டிருப்பார். இந்த நோய்க்கும் வலி நிர்வாகத்துறை சிகிச்சையில Trigger Point Injections மூலமாக குணம் பெறலாம். மாதவிடாய் காலங்கள்லயும், மெனோபாசுக்கு அப்புறமும், பெண்களுக்கு ஏற்படுற தாங்க முடியாத வலிகளுக்கும் நிவாரணம் உண்டு.
இந்த சிகிச்சைகளில் Fluroscopy Guided Intervention, Ozone Discectomy/Ozone Injection, Radio Frequency/Pulse RF Abalation, Botox Injection Therapy, Spinal Cord Stimulatory Implant, Intrathecal Pump Implant, Advanced Physio Therapy போன்ற மருத்துவ சிகிச்சை முறைகள் அவற்றில் முக்கியமானவை.
- டாக்டர் பிரபு திலக்,
புதுடில்லி.
வலைதளம்: www.painwin.com
