தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/அலோபதி: வயிற்றில் தீராத புண்: உடனடி கவனிப்பு தேவை!

அலோபதி: வயிற்றில் தீராத புண்: உடனடி கவனிப்பு தேவை!

அலோபதி: வயிற்றில் தீராத புண்: உடனடி கவனிப்பு தேவை!


PUBLISHED ON : அக் 09, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 09, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வயிற்றுப் புற்றுநோய் வருவதற்கான, முக்கியமான பொதுவான காரணங்கள், வறுத்த உணவுகளையும், மதுபான வகைகளையும் அதிகமாக உட்கொள்ளுதல், புகைபிடித்தல் மற்றும் வயிற்றில் கட்டி வளர்தல் புற்றுநோய் ஏற்படக் காரணங்களாக அமையலாம். வயிற்றில் ஏற்படும் புண்கள், எப்போதாவது அரிதாகப் புற்றுநோயாக மாறக்கூடும்.



வயிற்றில் புற்றுநோய் உள்ள நோயாளிகளின் நோய் எவ்வாறு தெரிய வருகிறது?



இத்தகைய நோயாளிகளைத் தொடக்க நிலையில், அல்லது முற்றிய நிலையில் கண்டறியலாம். தொடக்க நிலையில் இருக்கும் நோயாளிகள், உணவு உட்கொள்ள முடியாமல் இருக்கலாம், மற்றும் உடல் எடை குறையக்கூடும். அடிவயிற்றின் மேல் பகுதியில், பாதிப்பு ஏற்படலாம். இது, உறுதியாக இருக்குமெனக் கூற முடியாது. முற்றிய நிலையிலான நோயாளிகளுக்கு, ரத்தக் கசிவு ஏற்படலாம். இது, வாந்தி ஏற்படும் நிலையைக் கொண்டு வரலாம், அல்லது மலம் கெட்டியாகக் கறுப்பாக வெளியேறும். உணவுப் பாதையில் அடைப்பு ஏற்படுவதால், வாந்தி ஏற்படலாம். புற்றுநோய், கல்லீரலில் பரவிய நிலையிலும், நோயாளிகள் காணப்படலாம். இது, அரிதாக நுரையீரல் மற்றும் மூளைக்குக் கூடப் பரவலாம்.



வயிற்றில் ஏற்படும் புற்றுநோய்க்கு சிறந்த சிகிச்சை எது?



வயிற்றில் ஏற்படும் புற்றுநோய்க்கு, அறுவை சிகிச்சையே சிறந்த சிகிச்சையாகும். ஆனால், நோய் அறுவை சிகிச்சை செய்யத்தக்க நிலையில் இருக்கவேண்டும். நோய் மிகவும் முற்றிய நிலையில் இருக்கக்கூடாது. மேலும், 'கீமோதெரபி' மூலம் சிகிச்சை அளிக்கலாம். நோய் அதிக அளவில் பரவியிருந்தால், பின்னர் அறுவை சிகிச்சை கூடச் சாத்தியமாகாது.



இந்த நோய்களைக் கண்டறிவதற்காகப் பொது வாகச் செய்யப்படும் சோதனைகள் யாவை?



எண்டோஸ்கோபி, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் ஆகியவை மூலம், அடிவயிறு சோதனை செய்யப்படுகிறது. வயிற்றின் பின்பகுதியில், உணவுக் குழாய், வயிறு, சிறுகுடல் ஆகியவற்றை நாம் காணலாம்.அடிவயிற்றுக்குள் நோய் பரவியிருப்பது பற்றியும், கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றியும், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அறிந்து கொள்ள, ஸ்கேன் பரிசோதனை உதவும். சர்க்கரையின் அளவு மற்றும் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை ஆகியவற்றை மதிப்பீடு செய்ய, ரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற ஏனைய உடலுறுப்புகளும், சோதனை செய்யப்படுகின்றன.வயிறு சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்களிடம் ரத்த சோகை ஏன் காணப்படுகிறது? பொதுவாக, ரத்த இழப்பினால் ரத்த சோகை ஏற்படுகிறது. கட்டியின் மேற்பரப்பிலிருந்து ரத்தம் வெளியேறுவதால், இந்த வகை நோயாளிகளிடம் ரத்த சோகை காணப்படுகிறது.நோயாளி சாப்பிட முடியாமலும் போகிறது. வாந்தி எடுத்து விடவும் கூடும். புற்றுநோய், நோயாளிகளின் ஊட்டச்சத்தை உறிஞ்சி விடுகிறது.



சுருக்கம்



உணவுக்குழாய், வயிறு, சிறுகுடல் சம்பந்தப்பட்ட நோய்களைக் கண்டறிய, எண்டோஸ்கோபி கருவி மூலம் செய்யப்படும் சோதனை சிறந்த பரிசோதனையாகும்.உணவுக்குழாய் சம்பந்தப்பட்ட நோய்க்கான சிகிச்சை, முக்கியமாக மருத்துவ ரீதியில் அமைந்துள்ளது.உணவுப்பாதை சம்பந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், புகைப்பதும், மது அருந்துவதும் அவர்களுடைய நோயின் பாதிப்பை விரைவுபடுத்தும்.



- டாக்டர் விக்ரம். drvikramsrmc@yahoo.co.in



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us