PUBLISHED ON : மார் 01, 2015

குழந்தைகளுக்கான சத்துக்களை சேர்ப்பதில் கீரைகளுக்கு முக்கிய பங்குள்ளது. கண்பார்வை, எலும்புகளுக்கு வழுவூட்டுதல், மூளையின் செயல்பாடுகளை தூண்டுதல், போன்ற ஒவ்வொரு திறன்களை வளர்ப்பதற்கும், ஒவ்வொரு கீரை மருந்தாக உள்ளது. இதில், குழந்தைகளுக்கு அதிக பயன்களை அளிப்பது, பசலைக்கீரை. இக்கீரையில் உள்ள, புரதம், மற்றும் கொழுப்பு சத்துகள் குழந்தைகளுக்கு, உடல் பலத்தை அதிகரிக்கிறது. ஒரு கப் வேகவைத்த கீரையில், 41 கலோரிகளும், 5.3 கிராம் புரதம் மற்றும் 4.3 கிராம் நார்சத்தும் நிரம்பி உள்ளன.
உடல் எடையை கட்டுபடுத்த எண்ணுபவர்கள், நாள்தோறும் இதனை, ஒரு நேர உணவாக உட்கொள்வதனால், கெட்ட கொழுப்புகள் குறைந்து, எடை குறைவும் ஏற்படுகிறது. மூன்று முதல் எட்டு வயது குழந்தைகளுக்கு, நாள்தோறும், கட்டாயம், 13 முதல் 19 கிராம்,
9 முதல் 70 வயது வரை உள்ளவர்களுக்கு, 34 முதல் 56 கிராம் வரை புரதச்சத்து தேவைப்படுகிறது. நாள்தோறும், இதனை உணவோடு சேர்த்துக்கொள்ளவதனால், உடம்பிற்கு தேவையான புரதச் சத்து கிடைக்கிறது. இக்கீரையில், வைட்டமின் ஏ, கே அடங்கியுள்ளன.
ஒரு கப் வேகவைத்த பசலைக் கீரையில், 943 மைக்ரோ கிராம், வைட்டமின் ஏ மற்றும் 888 மைக்ரோ கிராம்,வைட்டமின் கே சத்தும் உள்ளன. கண்பார்வை குறைபாடு, இருதய நோய்களுக்கு தீர்வாகவும் உள்ளது. மேலும், சோடியம், பொட்டாசியம், சத்துகள் உள்ளதால், ரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது. ரத்த குழாய்களை, சரிசெய்து,சீரான ரத்த ஓட்டத்திற்கு வழி
வகுக்கிறது. மன இறுக்கத்தை போக்குவதற்கு, இக்கீரை பயன்படுகிறது. எலும்புகளை வழுப்படுத்தும், மெக்னீசியம், ஜின்க், காப்பர், ஆகிய சத்துக்களை கொண்டது. வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு, இதன் மூலம் தீர்வு கிடைக்கிறது. வயிற்று எரிச்சல், மற்றும் அல்சர் நோய்களுக்கு, பசலை கீரை மருந்தாக உள்ளது. புற்றுநோய்க்கான அறிய மருந்தாகவும் உள்ளது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் நாள்தோறும் இதன் சாற்றினை பருகி வருவதால், உடலிலுள்ள சர்க்கரை அளவு குறைகிறது. சிவப்பு அணுக்கள் மற்றும் ரத்த தட்டுகளை அதிகரிக்கிறது. இதனால், ரத்த சோகை ஏற்படுவதும் குறைகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது. மேலும், புறஊதா கதிர்களினால், தோல் நோய்கள் ஏற்படுவதை தவிர்க்கவும், பயன்படுகிறது.
பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ள எளிய உணவு வேறு இல்லை எனலாம். பசலைக் கீரையில் இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம். ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது. அதே சமயம் இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் உடலில் இரும்பு, கால்சியம் சேராமல் தடுக்கிறது. இதனால் இதய நோயாளிகள் இந்தக் கீரையை அளவுக்குமீறி சாப்பிடக் கூடாது.
இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த விருத்திக்கும் உதவுகிறது.

