sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

துரியனில் இவ்வளவு சத்துக்களா?

/

துரியனில் இவ்வளவு சத்துக்களா?

துரியனில் இவ்வளவு சத்துக்களா?

துரியனில் இவ்வளவு சத்துக்களா?


PUBLISHED ON : ஜூலை 02, 2017

Google News

PUBLISHED ON : ஜூலை 02, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும், நேரடியாக பழங்களில் இருந்து கிடைக்கின்றன. பழங்கள், உடலின் ஜீரண உறுப்புக்களை பலப்படுத்தி, எலும்புகளுக்கு பலம் சேர்க்கின்றன. ரத்தத்தை சுத்தப்படுத்துவதில், முக்கிய பங்கு வகிக்கின்றன.

பொதுவாக, பழங்களை சாறாக குடிப்பதை விட, நன்றாக மென்று சாப்பிடுவது சாலச்சிறந்தது. இதில், துரியன் பழம் உட்கொள்வதில், பலர் ஆர்வம் காட்ட துவங்கியிருக்கின்றனர். இது, அதிக மருத்துவ தன்மை கொண்டதாக இருக்கிறது. நறுமண வாசனையுடன் கூடிய துரியன் பழம், இனிப்பு சுவையை கொண்டுள்ளது. பழம் மட்டுமின்றி, இதன் இலைகளும், பல மருத்துவப் பலன்களை கொண்டுள்ளது.

மது, புகை, போதை போன்ற தீய பழக்கங்களால், உடல் வலுவிழந்தவர்களுக்கு இப்பழம், நல்ல மருந்து. இவர்கள், வாரம் இருமுறை, துரியன் பழம் சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் வலுவடையும். கொழுப்பு சத்தை கரைத்து, கலோரிகளாக மாற்றி, ரத்தத்தை சுத்தப்படுத்தி, இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்தும், தற்காத்துக் கொள்ளலாம். எரிச்சல், கோபம், மன அழுத்தம், மன உளைச்சல், போதிய உடற்பயிற்சியின்மை ஆகியவற்றால், நரம்புகள் எளிதில் பலவீனமடைகின்றன. இக்குறையை போக்க, துரியன் பழம் பயன்படுகிறது.

மலச்சிக்கலை நீக்கும் குணம், இப்பழத்துக்கு உண்டு. செரிமான சக்தியை தூண்டி, நன்கு பசியை ஏற்படுத்தும். விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வல்லது. பழத்தில், கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட்,

வைட்டமின் 'சி', நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் உள்பட பல சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பழத்தை விட, 10 மடங்கு அதிகமாக இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது.

வைட்டமின்கள் 'பி', பொட்டாசியம் மற்றும் கால்சியம், மூட்டுகள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது. நகங்களில் பிரச்னை இருக்கும் போது, இப்பழத்தின் வேர்களை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். மாங்கனீசு அதிகம் இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவும். மரத்தின் வேர் மற்றும் இலைகளை தண்ணீருடன் சேர்த்து பருகுவதால், காய்ச்சலில் இருந்து குணம் பெறலாம். இரும்பு மற்றும் போலிக் ஆசிட் அதிகளவு இருப்பதால் ரத்த சோகையை குணமாக்கலாம்.

இளமையிலேயே முதுமை தோற்றத்தில் காணப்படுபவர்கள், துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதிலுள்ள வைட்டமின் 'சி' சத்தால், முதுமை

தோற்றத்தை தடுக்கலாம். மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, துரியன் பழம் மிகவும் சிறந்தது. ஏனெனில், இதில் 'பைரிடாக்ஸின்' எனும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது.

தைராய்டு பிரச்னை உள்ளவர்கள், பழத்தை சாப்பிட்டு வந்தால், தைராய்டு சுரப்பியானது சீராக இயங்கும்.

பழுக்காத துரியன் காய்கள், பல குழம்புகளில் காய்கறி போல சேர்த்து சமைக்க பயன்படுகிறது. துரியன் பழ விதைகள், பலாக் கொட்டைபோல அவித்தும், வறுத்தும் சாப்பிடலாமாம். 100 கிராம் துரியன் பழத்தில், 147 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.






      Dinamalar
      Follow us