தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சுடச்சுட உணவுகளை ருசிப்பவர்களா நீங்கள்

சுடச்சுட உணவுகளை ருசிப்பவர்களா நீங்கள்

சுடச்சுட உணவுகளை ருசிப்பவர்களா நீங்கள்


PUBLISHED ON : ஏப் 28, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 28, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* எனக்கு வெகுநாட்களாக ஒரு கூரிய பல் வாய்த்தசையில் அழுத்திக் கொண்டே இருக்கிறது. அதற்கு நான் என்ன செய்யலாம்

கூரிய பற்கள் வெகுநாட்களாக வாய் தசையில் உரசினால் அந்த இடத்தில் புண் ஏற்பட்டு பிற்காலத்தில் புற்று நோயாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆகவே நீங்கள் பல் டாக்டரை சந்தித்து, அதன் கூரிய பல்லை மழுக்கிக் கொள்ள வேண்டியது அவசியம்.

* நான் ஒரு கல்லூரி மாணவி, விடுதியில் தங்கி படிக்கிறேன். எனது அறையில் உள்ள எல்லோரும் ஒரே லிப்ஸ்டிக்கை பயன்படுத்துகின்றனர். இது உடம்பிற்கு நல்லதா

ஒருவர் பயன்படுத்திய லிப்ஸ்டிக்கை மற்றவர்கள் பயன்படுத்துபோது, உபயோகிப்பவர்கள் உதட்டில் ஏதேனும் புண் அல்லது தொற்றுக் கிருமிகள் இருந்தால், அது மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே அவரவர் தங்களுக்கென்று தனியாக லிப்ஸ்டிக் வைத்துக் கொள்வது நல்லது.

* ஒரு நாளைக்கு எத்தனை முறை பல் துலக்க வேண்டும்

ஒரு நாளைக்கு காலை, மாலை இரு வேளைகளிலும் பல் துலக்குவது நல்லது. அப்போது தான் பல்லின் இடுக்குகளில் சிக்கிய உணவுப் பொருட்களை நீக்க முடியும். பல்பொடியை விட பற்பசை எல்லா இடங்களிலும் நன்றாக பரவி கிருமிகளையும், உணவுத் துகள்களையும் நீக்க எளிதாக வழிவகுக்கும்.

* எனது கழுத்தில் கடந்த 10 ஆண்டுகளாக முன்கழுத்துச் கழலை உள்ளது. அதற்காக நான் தைராய்டு மாத்திரை சாப்பிடுகிறேன். தற்போது சில மாதங்களாக அதில் வீக்கமும் வலியும் ஏற்பட்டு கழுத்தில் நெறிக் கட்டிகள் ஏற்பட்டுள்ளன. இதில் ஏதேனும் பிரச்னை இருக்குமா

வெகுநாட்களாக உள்ள முன் கழுத்த கழலையில் வலியோ வீக்கமோ ஏற்பட்டு நெறிகட்டி வந்தால் அது புற்றுநோயாக மாறியிருக்கக்கூடும். தைராய்டு புற்று நோய் என்பது முழுவதும் குணப்படுத்தக் கூடிய ஒரு புற்று நோய். ஆகவே நீங்கள் டாக்டரை பார்த்து திசு பரிசோதனை செய்வது நல்லது.

* நான் ஒரு சமையல் நிபுணர். ஆகவே உணவுப் பொருட்களை சூடாக சுவைத்து பார்ப்பது வழக்கம். இதனால் ஏதேனும் தீங்கு வருமா

நீங்கள் உணவு பொருட்களை சுவை பார்க்கும் போது அதிகமான சூட்டை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் சூடான உணவுகளை அடிக்கடி விழுங்குவதாலும், வேகமாக விழுங்குவதாலும் உணவுக் குழாயில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

- டாக்டர் மோகன் பிரசாத்,

புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்,

மதுரை

98430 50822


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us