PUBLISHED ON : ஜூலை 20, 2014

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமஜெயம், ராமேஸ்வரம்: எனக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. இதற்காக, 4 வகை இதய மருந்துகள் எடுத்து வருகிறேன். தற்போது சளி இருந்ததால், நுரையீரல் மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர், 6 வகை மருந்துகளை தந்துள்ளார். இவற்றையும், இதய மருந்துகளுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாமா?
இதய நோயாளிகள், புதிய மருத்துவரை சந்திக்கும்போது, அவர் கொடுக்கும் புதிய மருந்துகளை, உங்கள் இதய டாக்டரிடம் தெரியப்படுத்தி, கலந்து ஆலோசனை செய்து, எடுத்துக் கொள்வது நல்லது. ஏனெனில், பல மருந்துகள், இதய மருந்துடன் கலந்து வேறு விளைவை ஏற்படுத்திவிட வாய்ப்புள்ளது.

