sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/"சம்மணமிட்டு அமர்ந்தால் மூட்டுவலி'

"சம்மணமிட்டு அமர்ந்தால் மூட்டுவலி'

"சம்மணமிட்டு அமர்ந்தால் மூட்டுவலி'


PUBLISHED ON : ஏப் 21, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 21, 2013


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

* மூட்டுவலியால் மூன்று ஆண்டுகளாக அவதியுறுகிறேன். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செலவு மருத்துவமனைகளில் வேறுபடுகிறதே. நான் என்ன செய்வது?

இந்தியாவில், தற்போது மூட்டு மாற்று சிகிச்சையின் கட்டணம், சரியாக நிர்ணயிக்கப் படவில்லை. மேல்நாடுகளில் உள்ள, தலைசிறந்த மையங்களின் மூட்டு மாற்று சிகிச்சையின் வெற்றி, 98 சதவீதம். அதற்கு காரணம் அங்கு பின்பற்றப்படும் வழிமுறைகள். அறுவை சிகிச்சை அரங்கின் கட்டட அமைப்பு, அங்கு பின்பற்றப்படும் ஒழுங்குமுறைகள், அரங்கு, நோயாளிக்கான வெப்பநிலை, அறுவை சிகிச்சை பாகங்களுக்கு கொடுக்கப்படும் நீர்புகா உறைகள் போன்றவற்றை, தரமாக செய்வதில் அதிக செலவாகிறது.

இதுமட்டுமின்றி இந்திய செயற்கை மூட்டு, வெளிநாட்டு செயற்கை மூட்டு என, பல வேறுபாடுகள் உள்ளன. அனைத்தையும் தரமாக கடைபிடித்து, உயர்தரத்தில் செய்யும்போது, வெற்றி விகிதம் மேல்நாடுகளுக்கு இணையாக அமைகிறது. தேசிய அளவில், என்.ஏ.பி.எச்., அங்கீகாரம் பெற்ற மருந்துவமனைகளில், கண்டிப்பாக நல்ல தரம் எதிர்பார்க்கலாம். தரத்திற்கும், அறுவை சிகிச்சை செய்யும் நிபுணரின், மூட்டு மாற்று சிகிச்சையில் உள்ள சிறப்பு அனுபவத்திற்கும் முதலிடம் கொடுத்து, செலவைப் பற்றி விவாதிக்கலாம்.

* நாற்பது வயதான நான், சம்மணமிட்டு அமர்ந்தால் முழங்கால் மூட்டில் அதிக வலி உள்ளது. என்ன செய்வது?

சம்மணமிட்டு உட்காரும்போது வலி உண்டாவது, மாடிப்படி ஏறும்போதும், இறங்கும்போதும் வலி ஆகியவை மூட்டு தேய்மானத்தின் ஆரம்ப கால அறிகுறிகள். மூட்டிற்கு என, குறிப்பிடப்பட்ட சில பயிற்சி முறைகள் தினமும் செய்து வந்தால், தசைகளின் கட்டுப்பாடு அதிகமாகி, வலியின் தன்மை குறையும்.

Knee Support, VMO Exercise போன்ற சிகிச்சை முறைகள், உங்களுக்கு நன்மை தரும். நீங்கள் டாக்டரிடம், பரிசோதனை செய்து தக்க ஆலோசனைகள் பெற்று, சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.

டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,

மதுரை. 98941 03259

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us