PUBLISHED ON : மே 24, 2026

கொரோனா பரவலுக்கு பின், உலகம் முழுவதும் இயற்கை மருத்துவப் பொருட்களுக்கு வரவேற்பு அதிகரித்ததால், நம் நாட்டின் அஸ்வகந்தா மூலிகையின் ஏற்றுமதியும் உயர்ந்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளுக்கு, நம் நாட்டில் இருந்து அஸ்வகந்தா சார்ந்த மூலிகைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அஸ்வகந்தா எனப்படும் அமுக்கரா கிழங்கு என்பது, சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில், பல நுாற்றாண்டுகளாக பயன் படுத்தப்பட்டு வரும் முக்கிய மூலிகை.
இது உடல் வலிமை, மன அமைதி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நரம்பு ஆரோக்கியத்தை மேம் படுத்தும் மூலிகையாக பாரம்பரிய மருத்துவ நுால் களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஸ்வகந்தாவின் முக்கிய வேதிப் பொருட்கள், 'விதனோலைட்ஸ்' எனப்படும் இயற்கை சேர்மங்கள் இவை உடலில் அழற்சியை குறைக்கவும், மன அழுத்தத் தைக் கட்டுப்படுத்தவும், உடல் சக்தியை ஆதரிக்கவும் உதவக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இயற்கையிலேயே நச்சுத் தன்மை இல்லாத, வெளி, உள் காரணிகளால் ஏற்படும் உடல், மன அழுத்தத்திற்கு எதிராக செயல்படும் தாவரங் களை, 'அடாப் டோஜன்' என்று சொல்லுவோம். அஸ்வகந்தா, இந்த ரகத்தைச் சேர்ந்த மூலிகை.
ஆண்களுக்கு ஏற்படும் உடல் சோர்வு, மன அழுத் தம், துாக்கமின்மை, நரம்புத் தளர்ச்சி மற்றும் உடல் சக்தி குறைபாடு போன்றவற்றிற்கு, அஸ்வகந்தா பயன்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் சோர்வு, மன அழுத்தம், உறக்கக் குறைபாடு மற்றும் உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு, மற்ற மூலிகை மருந்துகளோடு சேர்த்து, துணை மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது.
அடிக்கடி சளி, உடல் பலவீனம், உணவு விருப்பமின்மை போன்ற கோளாறுகளால் குழந்தைகள் பாதிக்கப்படும் போது, மிகச்சிறிய அளவில் பரிந்துரை செய்யப்படுகிறது.
மூட்டுகளில் ஏற்படும் வலி, அழற் சியைக் குறைப் பதில் அஸ்வகந்தாவில் உள்ள 'விதனோலைட்ஸ்' என்ற ரசாயனம் உதவக் கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாத தோஷத்தை சமன் செய்யும் மூலிகையாக அஸ்வகந்தா இருப்பதால், மூட்டு விறைப்பு, தசை வலி மற்றும் உடல் சோர்வு போன்ற கோளாறுகளுக்கு, பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அனைவருக்கும் அஸ்வகந்தா பலன் தராது என்பதால், மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தக் கூடாது.
டாக்டர் மீரா சுதீர் ஸ்ரீஹரியம் ஆயுர்வேதம், சென்னை. 86101 77899sreehareeyam.co.in
