sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

இளம் வயதினருக்கு ஏற்படும் முதுகு வலி!

/

இளம் வயதினருக்கு ஏற்படும் முதுகு வலி!

இளம் வயதினருக்கு ஏற்படும் முதுகு வலி!

இளம் வயதினருக்கு ஏற்படும் முதுகு வலி!


PUBLISHED ON : பிப் 22, 2026

Google News

PUBLISHED ON : பிப் 22, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகு வலி என்பது வயதானவர்களுக்கு மட்டுமான நோய் என்ற நம்பிக்கை தகர்ந்துவிட்டது. உடலின் பின் பகுதியில், கழுத்தின் அடிப்பகுதியில் இருந்து, இடுப்பின் கீழ் பகுதி வரையுள்ள முது கெலும்பில் ஏற்படும் அசவு கரியம் தான் முதுகு வலி.

தசைநார் சுளுக்கு, முதுகெலும்பு கோளாறு, உள்ளுறுப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அறிகு றியாக முதுகு வலி திகழ்கிறது.

சர்வதேச அளவில் முதுகு வலி உள்ளவர்களில், 15 சத வீதம் பேர், நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சிக்குரிய தகவல்.

குறிப்பாக, 18 - 28 வயதினருக்கு அதிக ளவில் முதுகு வலி ஏற் படுவது அதிகரித்து வருகிறது. தினசரி பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், இதற்கு காரணமாக இருக்கலாம்.

இளைஞர்களுக்கு ஏற்படும் தசை மற்றும் மூட்டு பிரச்னைகளில் முதுகு வலி, 76 சதவீதம். முதுகெலும்பில் ஏற்படும் பிரச்னைகள், உடல்நலத்தை மோசமானதாக்கி, உயிரிழப்புகளை ஏற்படுத்தும், 10 காரணிகளில் ஒன்றாக முதுகு வலி உள்ளது.

அதே நேரத்தில், முதுகு வலி தொடர்பான கட்டுக்கதைகளும், போலியான நம்பிக்கைகளும் நம்மிடையே சகஜமாக உலா வருகின்றன.

கட்டுக்கதை: படுக்கையில் ஓய்வெடுப்பது முது கு வலிக்கு சிறந்த சிகிச்சை.

உண்மை: நீண்ட நேர ஓய்வு, தசைகளை பலவீனப்படுத்தும்; மூட்டுகளை விறைப்பாக்கும்;

வலியை நீட்டித்து, குண மடைவதை தாமதப்படுத்தும்.

மென்மையான, மெதுவான செயல்பாடுகள் தான் முதுகு வலியில் இருந்து விடுபட உதவும்.

கட்டுக்கதை: அதிக எடை துாக்குவது முதுகு வலியை உண்டாக்கும்.

உண்மை: அதிக எடையை துாக்குவதால் முதுகெலும்பு பாதிக்கப்படுவதில்லை. ஆனால், முறையற்ற முறையில் துாக்குவது முதுகு வலியை உண்டாக்கலாம்.

கட்டுக்கதை: உடற்பயிற்சி முதுகு வலியை மோசமாக்குகிறது.

உண்மை: சரியான உடற்பயிற்சி உண்மையில் முதுகு தசைகளை வலுப்படுத்தும்.

முதுகு வலியை தவிர்ப்பது எப்படி?

* நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்தும். 45 நிமிடங்களுக்கு ஒரு முறை எழுந்து நிற்பது, இரண்டு மணி நேரத்துக் கு ஒரு முறை தசை இறுக்கத்தைப் போக்க, 'ஸ்ட்ரெச்சிங்' செய்யலாம்.

* புரதம் நிறைந்த ஊட்டச் சத்து மிகுந்த சமச்சீர் உணவு, நீர்ச்சத்து குறையாமல் பாதுகாப்பது.

* கம்ப்யூட்டர் முன் அமரும் போது, நிமிர்ந்து உட்கார்ந்து, கண் மட்டத்திற்கு திரை இருக்க வேண்டும்.

நான்கு வாரங்கள் தொடர்ச்சியாக வலி இருப்பது, வலி பரவுவது, சில நேரங்களில் உணர்ச்சி இல்லாமல் போவது, நடப்பது, நிற்பதில் சிரமம், முதுகு வலியுடன் கூடிய குடல், சிறுநீர்ப்பையில் தொந்தரவுகள் ஏற்பட்டால், உடனடியா க மருத்துவ ஆலோசனை வேண்டும்.



டாக்டர் எம்.டி.எஸ். சசிதரன், சிகிச்சை நிபுணர், கிளெனிகள்ஸ் மருத்துவமனை சென்னை 79967 89196info.chn@glleneagleshospitals.co.in






      Dinamalar
      Follow us