
எந்த காலத்திற்கும் ஏற்ற ஒரே பழம் வாழைப்பழம் தான். உடல் வளர்ச்சிக்கு ஏற்ற அனைத்து சத்துக்களும் இதில் உள்ளன. உணவுக்கு பதிலாக வாழைப்பழத்துடன், ஒரு டம்ளர் பால் குடித்தால் போதும். நல்ல ரகத்தில், ஒரு பெரிய வாழைப்பழம் சாப்பிட்டால், 20 திராட்சை, 4 பேரிச்சம்பழம், 2அத்திப்பழம், ஒரு சிறிய ஆப்பிள், ஒரு கோப்பை ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டதற்கு சமம் என்கிறார்கள் உணவு நிபுணர்கள்.
வாழைப்பழத்தில், திசுக்களை உருவாக்கும் பொருட்கள் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுப்
பொருட்கள் உள்ளன. அனலில் வாட்டிய வாழைப்பழத்துடன், மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட, ஆஸ்துமா, மூச்சுத்திணறல் நிற்கும். மலச்சிக்கல் உள்ளவர்கள் நாள் தோறும் இரவு, இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு, பசும் பால் குடிக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு ஒரு பழம் கொடுத்தால் போதுமானது. ரஸ்தாலி பழத்தை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க
வேண்டும். இதை குழந்தைகள் உட்கொண்டால், அவர்களுக்கு பசிமந்தம் ஏற்படும்.
பசியை துண்டும் பூவன்வாழைக்கு உண்டு. ஆனால் அதிகம் சாப்பிட்டால் வாந்தி ஏற்படும். பேயன்வாழை உடல்சூட்டை தணிப்பதோடு, மலக்கட்டை போக்கும், நோய்களை போக்கி மேனியை அழகுற செய்யும்.
இது தவிர, குடல் சம்மந்தமான நோய்களுக்கும், வயிற்றுவலி, மூட்டுவலி, முழங்கால்வீக்கம், ரத்தசோகை ஆகியவற்றிற்கும், வாழைப்பழம் சிறந்த மருந்தாகும். வாழைப்பழம் சாப்பிட்டால் வெயிட் போடும் என்பது சிலரது எண்ணம். அது உண்மையல்ல.
ஏனெனில், 0% கொழுப்பு கொண்டது வாழை. மாறாக, அதிக உணவு சாப்பிடும் ஆர்வத்தை வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச் தடுக்கிறது. அதன் கார்போஹைட்ரேட் காரணமாக, அளவோடு உணவு சாப்பிட்டு, ஸ்லிம்மாக இருக்க முடியும். ஒட்டுமொத்த உடல் இயக்கத்துக்கு, வாழைப்பழம் உதவுகிறது. உணவின் கால்சியம், மக்னீசிய சத்துக்களை, உடலில் முழுமையாக சேர்க்கிறது. முழுமையாக பழுக்காத, திடமான, நடுத்தர அளவுள்ள வாழைப்பழத்தில் 4.7 கிராம்
ஸ்டார்ச் இருக்கிறது. இது நீண்ட நேரம் பசியை தடுக்கும்.
கோதுமை, மக்கா சோளம், சிகப்பரிசி, பருப்புகள், உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன. ஏனெனில், ஆப்பிளைவிட புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், பொட்டாசியம், விட்டமின் சி, இரும்பு, பாஸ்பரஸ் ஆகியவை வாழைப்பழத்தில் பல மடங்கு அதிகம். வாழைப்பழத்தில் 100 கலோரிகளே உள்ளதால் எடை அதிகரிக்காது. ஸ்லிம்மாக இருக்கலாம். எனவே, தினசரி 2 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இளமை, ஆரோக்கியம் நிச்சயம். வாழைப்பழத்தை ஒரு போதும் பிரிட்ஜில் வைக்க கூடாது.
வளரும் குழந்தைகளுக்கு வாழைப்பழம் எப்போதும் பெஸ்ட் சாய்ஸ்.

