தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பெற்றோரிடம் விலகியிருப்பது மன அழுத்தத்தை தரலாம்!

பெற்றோரிடம் விலகியிருப்பது மன அழுத்தத்தை தரலாம்!

பெற்றோரிடம் விலகியிருப்பது மன அழுத்தத்தை தரலாம்!


PUBLISHED ON : மார் 13, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 13, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெற்றோருக்கும், 'டீன் ஏஜ்' குழந்தைகளுக்கும் இடையிலான பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. குழந்தை வளர்ப்பில் குறிப்பாக, பதின் பருவத்தினரை கையாளுவதில் அதிக கவனம் அவசியம். அந்த வயதில் உள்ள குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகம் உள்ளது.

அறிகுறிகள்:

* படிப்பில் கவனமின்மை

* எதிர்த்து பேசி கோபப்படுதல்

* எதிலும் நாட்டமின்மை

* பள்ளிக்கு செல்ல மறுப்பு

* அதிக நேரம் நண்பர்கள் வட்டத்துடன் செலவழிப்பது

* மகிழ்ச்சியற்ற நிலை

* துரித உணவு மட்டுமே விரும்புதல்

* துாக்கமின்மை

* வீட்டில் அனைவரும் இருந்தும் தனிமையாக உணர்வது

* பள்ளி செல்ல விருப்பமின்மை

* இனம் புரியாத பயம் காரணமாக, சில கற்பனை எண்ணங்கள்

* பெற்றோர் மீது கோபம்

* பதின் பருவ ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தத்தை தரலாம்.

கண்டறிவது எப்படி?

சரியோ, தவறோ தங்கள் விஷயங்களை தைரியமாக பெற்றோரிடம் பகிர்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அதிக நேரம் தனிமையில் இருப்பது, எதையோ சிந்திப்பது, கவலையுடன் காணப்பட்டால், வெளியே அழைத்துச் சென்று பிடித்த உணவோ, பொருளோ வாங்கி தந்து, அன்பாக பேசினால், எந்த குழந்தையும் மனதில் உள்ளதை சொல்லிவிடும்.

தந்தையோ, தாயோ அதீத கண்டிப்பை தவிர்ப்பது முக்கியம். கலகலப்பான குடும்ப சூழல், பிள்ளைகளின் தனிமையை தவிர்க்க உதவும்.

தனிமை மற்றும் சார்ந்திருப்பதை தவிர்க்க:

பல வீடுகளில் பிள்ளைகள் தாயிடம் மட்டும் வெளிப்படையாகவும், தந்தையிடம் விலகியும் இருப்பர்; இதுவும் மன அழுத்தத்திற்கு காரணமாகிறது.

எளிதாக மனமுடைந்து விடாமல், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள அவர்களை பழக்க வேண்டும்.

- பிடியாட்ரிக் சைக்காலஜி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us