sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

நோய்கள் ஜாக்கிரதை: சாயம் அல்ல சாபம்

/

நோய்கள் ஜாக்கிரதை: சாயம் அல்ல சாபம்

நோய்கள் ஜாக்கிரதை: சாயம் அல்ல சாபம்

நோய்கள் ஜாக்கிரதை: சாயம் அல்ல சாபம்


PUBLISHED ON : ஜன 07, 2015

Google News

PUBLISHED ON : ஜன 07, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'லிப்ஸ்டிக்' பயன்படுத்தும்போது, அதில் உள்ள ரசாயனங்களால், நிறைய பிரச்னைகள் ஏற்படும் என்பது பெண்களுக்குத் தெரியும். இருந்தாலும், உதட்டழகை மெருகேற்றுவதில் 'லிப்ஸ்டிக்' தவிர்க்க முடியாத ஒன்று 01. நோய்கள் ஜாக்கிரதை: சாயம் அல்ல சாபம்

என்பதால், அவர்கள் அதை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், தரமான 'லிப்ஸ்டிக்'குகளை அடையாளம் காண்பது எப்படி?

லிப்ஸ்டிக்கில், குரோமியம், காட்மியம், மற்றும் மக்னீசியம் அதிக அளவில் உள்ளன. இதை பயன்படுத்தும்போது, கடுமையான நோய்க்கு உடல் ஆளாவதோடு,

உறுப்புகள் பாதிப்படையும் என்கின்றன

ஆய்வுகள்! அதிகப்படியான காட்மியமானது, சிறுநீரகத்தில் படிந்தால், அவை நாளடைவில் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தி விடும். ஒரு நாளைக்கு, பலமுறை லிப்ஸ்டிக் போட்டு வந்தால், வயிற்றில் கட்டிகள் வளரும்! பெரும்பாலான லிப்ஸ்டிக்குகளில் இருக்கும் 'ஈயம்', நரம்புகளின் செயல்திறனை பாதிக்கும்; தொடர்ந்து, மூளையில்

பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு; மேலும், ஹார்மோன்

ஏற்றத்தாழ்வுகளும், மலட்டுத்தன்மையும் கூட ஏற்படலாம்!

இவை தவிர, 'லிப்ஸ்டிக்' தயாரிப்பில் பயன்

படுத்தப்படும் பெட்ரோ கெமிக்கல்கள், பாராபின்ஸ் மற்றும் பிஸ்மத் ஆக்ஸிகுளோரைடு உள்ளிட்டவை, நாளமில்லா சுரப்பிகளில் சீர்குலைவை ஏற்படுத்தி, இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சியை தடுக்கும்! இதிலுள்ள பார்மால்டிஹைடு, புற்றுநோயைத் தூண்டும்! கனிம எண்ணெய்கள், சருமத்துளைகளை அடைத்து, உதடுகளின் இயற்கை அழகை பாதிக்கும்!

மொத்தத்தில், எவ்வளவு தரமான லிப்ஸ்டிக்காக இருந்தாலும், குறைவான உபயோகமே உடல்நலத்திற்கு நல்லது!

-- முருகன்,

நுகர்வோர் வழக்கறிஞர்.






      Dinamalar
      Follow us