தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/சர்க்கரை நோய்க்கு கருப்பட்டி நல்லது

சர்க்கரை நோய்க்கு கருப்பட்டி நல்லது

சர்க்கரை நோய்க்கு கருப்பட்டி நல்லது


PUBLISHED ON : செப் 20, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 20, 2015


Follow on Google
அ நிறம் | அளவு

பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது. இதில் இருக்கும் மருத்துவத் தன்மையின் காரணமாக, இன்றும் கிராமங்களில் பயன்படுத்துகின்றனர். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டியானது, நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் உதவி புரிகிறது.

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து, உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெறுவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலியை போக்க, கருப்பட்டி சாப்பிடலாம். சீரகத்தை வறுத்து, சுக்கு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.

ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபியில் கருப்பட்டி போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம்.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். அடிக்கடி சிறுநீர் போவது குறையும். உடலுக்கு ஆற்றலை தரக்கூடிய உணவாக கருப்பட்டி கருதப்படுகிறது. கருப்பட்டியை

நாள்தோறும் அனைவரும் பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us