தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/உடலில் வெப்பம் ரொம்ப நல்லது

உடலில் வெப்பம் ரொம்ப நல்லது

உடலில் வெப்பம் ரொம்ப நல்லது


PUBLISHED ON : ஜூலை 17, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 17, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

உடம்பில் உயிர் நிலைத்திருக்க இன்றியமையாதவையாக இருப்பவை நீரும், நெருப்பும். இவை இரண்டும் இல்லையென்றால், உடம்பில் உயிர் தங்காது. இங்கே நெருப்பு என்று குறிப்பிடுவது வெப்பம் ஆகும்.

சூடு இல்லாமல் போனால், ரத்தம் உறைந்துவிடும். ஆகவே, உடம்பிலுள்ள சூடு, உடலெங்கும் பரவியிருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். உடம்பில் சூடு இல்லாத இடமோ, அல்லது உறுப்புகளோ இல்லை.

உடம்பிலுள்ள உறுப்புகளிலும் சூடு பரவி நிறைந்துள்ளது. உடம்பை இயக்குவதற்குச் சூடு தேவைப்படுவதைப்போல், உடம்பிலுள்ள அசுத்தங்கள், கழிவுகளை நீக்கவும், அழிக்கவும் சூடு தேவைப்படுகிறது.

உடம்பில் நச்சுப்பொருள்கள் அதிகமாக இருந்தால், காய்ச்சலும் அதிகமாக இருக்கும். காய்ச்சல் வருவது, உடல் நலத்துக்காகவே என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். நன்றாக காய்ச்சல் வந்தால், உடம்பிலுள்ள நச்சுப்பொருள்கள் முற்றிலும் அழிந்து போகும். மனிதர்களின் உடம்பு மென்மையானது. வெப்பமோ, குளிரோ சிறிதளவே இருந்தாலும் பாதிக்கப்படக்கூடியது.

மனித உடம்பின் தன்மையை அறிந்து, அதற்கு ஏற்றவாறு, பருத்தி, கம்பளி, தோலாடை போன்றவற்றை அணிந்து, பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உடல் தூய்மைக்கு நீர் அமைவது போல், சூரிய ஒளியும் புறத்தை, உடலை தூய்மை செய்கிறது.

சூரிய ஒளி, நச்சுப்பொருள்களை அகற்றவும், அழிக்கவும் பயன்படுகிறது. மாலை வேளையில், வெற்றுடம்புடன் சூரிய ஒளியில் அமர்ந்து கொண்டிருந்தால், உடம்பின் மேற்பகுதியில் படிந்துள்ள, நச்சுப்பொருள்கள் அழிந்துவிடும். உடலில், நச்சுப்பொருள்களை வெளியேற்ற, வெளியேற்ற, உடல் தயாராகும்போது, அதற்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us