தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பீ.பி. ஓடணுமா? ரிலாக்ஸ் ப்ளீஸ்!

பீ.பி. ஓடணுமா? ரிலாக்ஸ் ப்ளீஸ்!

பீ.பி. ஓடணுமா? ரிலாக்ஸ் ப்ளீஸ்!


PUBLISHED ON : ஜூன் 21, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 21, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரத்தக்கொதிப்பானது இன்றைய அவசர உலகில் பலருக்கும் உள்ளது. வேலைப்பளு காரணமாகவும், ஓயாத மன உளைச்சலின் காரணமாகவும் இது ஏற்படுகிறது. நம் ஒவ்வொருவருக்கும் ஓரளவு இயற்கையிலேயே ரத்த அழுத்தம் இருக்கும். இவை பரம்பரை மூலமாகவும் ஏற்படக்கூடியது. இதனை முழுவதுமாக தவிர்க்க முடியாது. மாறாக உணவு கட்டுப்பாடு மற்றும் சில எளிய பயிற்சியின் மூலம் கட்டுக்குள் வைக்கமுடியும்.

ரத்தக் கொதிப்பு ஏற்படுவது ஏன்?

ரத்தக் கொதிப்பு என்பது அதிக ரத்த அழுத்தத்தினால் ஏற்படுவது. இது ஏற்படுவதற்கான காரணங்களை துல்லியமாக கூறமுடியாது. அது பெற்றோரிடமிருந்து பிள்ளைகள் என, பரம்பரை பரம்பரையாக தொடர்வதாகும். பொதுவாக இவை தொடர் மனஅழுத்தத்தின் காரணமாகவும், ஓய்வில்லாத கடுமையான உழைப்பு, அதிக அளவு கொழுப்பு சத்துள்ள உணவு பொருட்களின் மூலமும் மற்றும் இறைச்சி, தேயிலை, புகையிலை மற்றும் போதை பொருட்களின் மூலமாகவும் உண்டாகிறது.

ரத்த அழுத்தம் ஒரே நாளில் ஏற்படுவதில்லை. நீண்ட காலங்கள் உள்ளூற இருந்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். நம்முடைய ரத்த அழுத்தம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு ஏற்ப மாறும்.

துயரம், அதிக அளவிலான மகிழ்ச்சி, அச்சம் மற்றும் கட்டுக்கடங்காத உணர்ச்சிகள் மூலமாக ரத்த அழுத்தமானது, 30 முதல் 60 எண்கள் வரை உயரும். நாம் உறங்கும் போது உள்ளதை விட, நடக்கும் போதும் அதைவிட ஓடும் போதும், ரத்த அழுத்தம் அதிகரிக்கக் கூடும்.

தியான முறைகளை பின்பற்றலாம்!

ரத்த கொதிப்பிற்கு மலச்சிக்கலும் முக்கிய காரணமாகும். சரியான நேரத்தில் எப்படி உணவு உட்கொள்கிறோமோ அது போல மலம் கழித்தலையும் குறித்த காலத்தில் முடிக்க வேண்டும். அதிக அளவு பழம், சுத்தமான பசும்பால் மற்றும் நிறைய தண்ணீர் அருந்தி வந்தால் இந்த மலச்சிக்கல் வராது.

செய்யக்கூடாதவை

ரத்த கொதிப்புள்ளவர்கள் அதிக நேரம் ஓய்வின்றி கண்விழித்தல் கூடாது. உணர்ச்சிகளை தூண்டக்கூடிய சினிமா அல்லது செயல்களை தவிர்க்க வேண்டும். அதிகளவு கோபத்தை காட்டக்கூடாது. காபி, டீ, குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். புகையிலை சம்மந்தமான எதையும் பயன்படுத்தக்கூடாது. முக்கியமாக, மது அருந்தக்கூடாது.

செய்யவேண்டியவை

ரத்த கொதிப்புள்ளவர்கள் முதலில் அமைதியாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியோ அல்லது துன்பமோ அதிக அளவு உணர்ச்சிகளை காட்டக்கூடாது. இவை நம்மை அதிகளவு பாதிக்கும். வேலை நேரம் போக அதிகளவு ஓய்வெடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us