பைபாஸ் செய்து கொண்டிருக்கிறேன் - தீபாவளி பலகாரம் சாப்பிடலாமா?
பைபாஸ் செய்து கொண்டிருக்கிறேன் - தீபாவளி பலகாரம் சாப்பிடலாமா?
PUBLISHED ON : நவ 07, 2010

ஆர்.நாகராஜன், கோலியனூர், விழுப்புரம்:
எனக்கு மூச்சுத் திணறல், மார்புவலியும் உள்ளது. பல முறை எக்கோ ஸ்கேன் செய்து பார்த்ததில்,R.H.D., MR, AR என வந்துள்ளது. இது என்ன வியாதி? இதற்கு என்ன சிகிச்சை உள்ளது?
R.H.D. என்பது Rhumatic Heart Disease என்று பொருள். இதில் MR, AR என்பது Mitral Valve, Aortic Valveகளில் ரத்தக்கசிவு உள்ளது என்பதை குறிக்கும். இந்த ரத்தக்கசிவு சிறியளவில் இருந்தால் எதுவும் பாதிப்பு இராது. ஆனால், ரத்தக்கசிவு கூடுதலாகி மூச்சுத் திணறல் அளவுக்கு வந்தால், அவசியம் அந்த இரு வால்வுகளை யும் மாற்றியே ஆக வேண்டும். இதை ஆபரேஷன் முறையிலேயே சரிசெய்ய முடியும். பழுதான இந்த இரு வால்வு களையும் அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக செயற்கை வால்வுகள் பொருத்தப்படும். இம்மாதிரி அறுவை சிகிச்சைகள் முதல்வரின் உயிர் காப்பீட்டு திட்டத்தில் முழுவதும் இலவச மாகவே செய்யப்படுகிறது.
ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி: ஆஞ்சைனா (Angina) என்றால் என்ன?
Angios என்றால் ரத்தக்குழாய் என்று பொருள். ரத்தக்குழாய்களில் ஏற்படும் வியாதிகளால் உருவாகும் நெஞ்சுவலியை ஆஞ்சைனா என்பர். இருதயத்திற்கு செல்லும் மூன்று ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் உள்ளது. இந்த ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, அதனால் ஏற்படும் வலியே ஆஞ்சைனா என்பது. இந்த ஆஞ்சைனாவின் குணாதி சயம் என்னவென்றால் மெதுவாக, நடந்தால் இவ்வலியை ஏற்படுத்தும். ஓய்வெடுத்தாலோ அல்லது நாக்கிற்கு அடியில் 'Isordil' என்ற மாத்திரையை வைத்துக் கொண் டாலே வலி மறைந்து விடும். பொதுவாக வலியானது நடு நெஞ்சிலோ, வலது, இடது நெஞ்சிலோ, கைகளிலோ, தோள் பட்டை, முதுகிலோ, கழுத்து, மேல்வயிறு பகுதியிலோ வரலாம். சில நேரம் ஓய்வெடுக்கும் போது ஏற்பட்டால் அது 'Unstable Angiona' எனப்படும். இதற்கு ஆஞ்சியோ கிராம் பரிசோதனை செய்து, அதற்கேற்ப மருந்து மாத் திரையோ, பலூன் சிகிச்சையோ, பைபாஸ் அறுவை சிகிச்சையோ தேவைப்படலாம்.
எஸ்.பிரபாகரன், ராஜபாளையம்: எனக்கு 43 வயதாகிறது. கடந்த இரு ஆண்டுகளாக சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு நோய் உள்ளது. இதற்காக,Metaprolol' மற்றும் 'Statin' மாத்திரை களையும், சர்க்கரை வியாதிக்கான மாத்திரை யையும் எடுத்து வருகிறேன். சில மாதங்களாக எனக்கு ஆண்மைக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
இவ்வயதில் ஆண்மைக் குறைவு ஏற்பட்டால் அது வியாதியாலோ அல்லது மருந்து மாத்திரையாலோ ஏற்படலாம். சர்க்கரை அளவையும், ரத்த அழுத்தத்தின் அளவையும் கட்டுப்பாட்டில் வைப்பது முக்கியம். அவற்றை கட்டுப்பாட்டில் வைத்தால், இதுபோன்ற கொடூர பாதிப்புகள் வராமல் பார்த்து கொள்ள முடியும். சில சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோய்களுக்கான மாத்திரை கள் இப்பாதிப்புகளை ஏற்படுத்த லாம். எனவே உங்கள் டாக்டரிடம் சென்று உடனடியாக இந்த மாத்திரை களை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக வேறு மாத்திரைகளை பெறுவது மிக அவசியமானது.ஆகவே, ஆண்மை குறைவு வராமல் பாதுகாக்க வியாதியை கட்டுப்பாட்டில் வைப்பதும் முக்கியம். அதேபோல சரியான மாத்திரையை தேர்ந்தெடுப்பதும் மிக முக்கியம்.
எஸ்.தேவகி, மதுரை: எனக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து இரண்டு மாதங்களாகிறது. நான் தீபாவளி பண்டிகையையொட்டி பலகாரங் களை சாப்பிடலாமா?
ஒருவர் 95 சதவீதம் சரியான வாழ்க்கை முறை, உணவுக் கட்டுப் பாடு, உடற்பயிற்சி போன்றவற்றை முறையாக கடைபிடித்தால் என் றாவது ஒருநாள், பண்டிகையிலோ, விழாக் காலத்திலோ விரும்பியதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
இதற்கு, 'Treat Technique' என்று பெயர். இது எந்த விதத்திலும் இருதய ஆரோக்கியத்தையோ, பொது ஆரோக்கியத்தையோ பாதிக் காது.வாழ்க்கை வாழ்வதற்கே என் பதை மறந்துவிடக் கூடாது.
- டாக்டர் சி.விவேக்போஸ், இருதய நோய் நிபுணர், மதுரை.

