தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மலச்சிக்கல் தீர்க்கும்முட்டைக்கோஸ்

மலச்சிக்கல் தீர்க்கும்முட்டைக்கோஸ்

மலச்சிக்கல் தீர்க்கும்முட்டைக்கோஸ்


PUBLISHED ON : மார் 29, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 29, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முட்டைகோசில் உள்ள தழைச்சத்தும், நார்ச்சத்தும் பெருங்குடல் நன்கு வேலை செய்ய உதவுகின்றன. முட்டைகோசில் உள்ள டார்டரானிக் அமிலம், உடலில் உள்ள மாவுப்பொருள்கள் கொழுப்பாக மாறாமல் இருக்க செய்கிறது. இது உடல் எடையை குறைக்க பயனுள்ள உணவு.

வயிற்றுப் புண் உள்ளவர்கள், முட்டைக் கோஸ் சாற்றை மூன்று அவுன்ஸ் வீதம் நான்கு முறை குடித்து வந்தால், வயிற்று புண் குணமாகும். இதனை சாப்பிட்டால், புற்றுநோய் செல் வளர்ச்சியை முற்றிலும் தடுக்கும். ஆய்வு ஒன்றிலும், முட்டைக்கோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அல்சரை குணப்படுத்தும், குளூட்டமைல் அதிக அளவில் முட்டைக்கோசில் உள்ளது. ஆகவே அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிடலாம்.

உடலில் அழற்சி அல்லது உட்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டைகோஸை சாப்பிட்டால், அதில் உள்ள அமினோ ஆசிட் குளூட்டமைன் அழற்சியை குணப்படுத்தும். பீட்டா- கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், கண்புரையையும் தடுக்கிறது.

எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைக்கோஸ் அல்லது முட்டைக்கோஸ் சூப் சாப்பிட்டால் போதும்.

இளம் சிவப்பு நிற முட்டைக்கோசை சாப்பிட்டால், அல்சைமர் நோயை தடுக்கலாம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள வைட்டமின் கே மற்றும் ஆந்தோசையனின் எனும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், மூளை ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை நீக்கும். முட்டைக்கோசில் உள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்னையை குணமாக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us