தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/காய்கறிகளில் கால்சியம்!

காய்கறிகளில் கால்சியம்!

காய்கறிகளில் கால்சியம்!


PUBLISHED ON : ஏப் 09, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 09, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில், அவைச உணவு உட்கொண்டால் தான், திருப்தி என்கிற நிலை பலருக்கு. ஆனால், சைவ உணவு வகையிலும் ஏராளமான சத்துகள் அடங்கியிருக்கின்றன.

வாழைத்தண்டு: கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்கள், வைட்டமின் 'பி', 'சி' ஆகியவை உள்ளன. இது, சிறுநீர் கல் அடைப்பு இருந்தால், அதை கரைக்க உதவும். வாழைத் தண்டிலுள்ள நீர்ச்சத்தும் நார்ச்சத்தும், அதிகப்படியான சதையைக் குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக மாற்றும். இதிலுள்ள வைட்டமின் 'பி6', ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிறது. பொட்டாசியம், இருதய தசைகளை வலுவடைய செய்கிறது.

வைட்டமின் 'ஏ', 'சி' நிறைந்த வாழைத்தண்டு, தோல் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இருமல், காது நோய், கர்ப்பப்பை நோய்கள், விஷக்கடிகளால் ஏற்படும் வலி மற்றும் இதர நோய்களுக்கு, சிறந்த மருந்தாக விளங்குகிறது.

வாழைப்பூ: கால்சியம், பாஸ்பரஸ், புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் 'பி', 'சி' அதிகமாக உள்ளன. இவை மலச்சிக்கலை போக்க உதவும்.

வாழைக்காய்: இரும்புச்சத்து, போலிக் ஆசிட், வைட்டமின் 'ஏ', 'பி', 'சி' உள்ளன. கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் ரத்த÷சாகையை தடுக்க உதவும்.

பீட்ரூட்: இதில் துத்தநாகம், கால்ஷியம், ÷சாடியம், பொட்டாஷியம் ஆகியவை உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும். உடல் வளர்ச்சிக்கு ஏற்றது. பீட்ரூட் சாறு, தினமும் ஒரு குவளை குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, கல்லீரல் பிரச்னைகளும் அகலும். பீட்ரூட் சாறு, தினமும் குடித்து வர, உடலுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

உருளைக்கிழங்கு: மாவுச்சத்து அதிகமாக உள்ளது. வைட்டமின் 'ஏ', 'சி' மற்றும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.

பாகற்காய்: வைட்டமின் 'சி', 'ஏ', 'பி', பாஸ்பரஸ், கால்ஷியம் உள்ளன. இதை உட்கொள்வதன் மூலம், பசி அதிகரிக்கும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும். சீரான முறையில் பாகற்காய் சாறு குடித்து வந்தால், செரிமான அமிலம் சுரப்பது மேம்படும். பசியும் அதிகரிக்கும். கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில், முக்கிய பங்கு வகிக்கிறது.

கேரட்: வைட்டமின் 'ஏ' அதிகமாக உள்ளது. குழந்தைகளின் உணவில் அதிகமாக சேர்த்தால், பிற்காலத்தில் பார்வை கோளாறு எதுவும் வராது. மாலைக்கண் நோயை கட்டுப்படுத்தவும் உதவும்.

கத்தரிக்காய்: பாஸ்பரஸ், போலிக் ஆசிட், வைட்டமின் 'பி', 'சி' உள்ளன. ரத்தத்தை சுத்தப்படுத்தும். ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில், கத்தரிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது. 100 கிராம் கத்தரிக்காயில், 24 சதவீதம் கலோரிகள், 9 சதவீதம் நார்சத்து உள்ளது.

வெண்டைக்காய்: போலிக் ஆசிட், கால்ஷியம், பாஸ் பரஸ், இரும்புச்சத்து உள்ளது. மூளை வளர்ச்சிக்கு உதவும். எளிதில், ரத்தத்தால் உட்கிரகிக்கப்படுகிறது. தொடர்ந்து உட்கொண்டால், மலச்சிக்கல் நீங்கும்.

பீன்ஸ்: புரதச்சத்து, கால்ஷியம், இரும்புச் சத்து, வைட்டமின் 'ஏ', 'பி', 'சி' உள்ளன. எலும்பு வளர்ச்சிக்கு உதவும். நார் சத்து உள்ளதால், மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்.

புடலங்காய்: வைட்டமின் 'ஏ', 'பி', இரும்புச் சத்து, தாமிரம், கால்ஷியம் உள்ளன. எலும்பு உறுதிப்படும்.

அவரைக்காய்: புரதச்சத்து, நார்ச்சத்து உள்ளன, உடல் வளர்ச்சி பெறும், மலச்சிக்கலை போக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us