sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/ரத்தம் சுத்தம் அடைய மாதுளம் ரொம்ப நல்லது!

ரத்தம் சுத்தம் அடைய மாதுளம் ரொம்ப நல்லது!

ரத்தம் சுத்தம் அடைய மாதுளம் ரொம்ப நல்லது!


PUBLISHED ON : ஆக 30, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 30, 2015


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பூக்கள் என்றாலே அழகும், அதன் நறுமணமுமே நமது சிந்தைக்கு வரும். இதில் பல பூக்களில் அரிய மருத்துவ குணங்கள் உள்ளன. நோயில்லாத வாழ்விற்கு சத்துள்ள உணவுகளையும், பழங்களையும் உண்ண வேண்டும். இதில், பழங்களின் முதற்கட்டமான பூக்களில், பல்வேறு சத்துக்கள் மறைந்துள்ளன. இதற்கு மாதுளைப்பூ உதாரணம். இன்றைய உணவுகளில் கொழுப்பு சத்து, எண்ணெய் சத்து நிறைந்த பொருட்களே அதிகம் உள்ளன. இதனால், உடலின் தோற்றம் நன்றாக காணப்படுமே தவிர, உடலிற்கு தேவையான சத்துகள் மிகக்குறைவாகவே இருக்கும்.

மாதுளைப் பூவை பொடி செய்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், உடல் வலுவடைந்து, நல்ல ஆரோக்கியம் உண்டாகும். பலர் மாதுளை பழத்தின் தோலை உரித்து விதைகளை மட்டுமே சாப்பிடுகின்றனர். தோலை வீசி விடுகின்றனர். வயிற்றுக் கடுப்பால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், தோலை மை போல் அரைத்து மோர் அல்லது வீட்டுத்தயிரில் கலந்து பருகி வந்தால் பயன் கிடைக்கும்.

ரத்தம் சுத்தமடையும்: உடலில் உள்ள ரத்தம் அசுத்தமானால், உடலை பல விதமான நோய்கள் தாக்குவதற்கு வாய்ப்பு உருவாகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தி ரத்தத்திலுள்ள சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ரத்த தட்டுகளின் அளவையும் சீர் செய்வதற்கு, மாதுளைப் பூ சிறந்த மருந்தாகும். மாதுளைப் பூ பொடியில், கஷாயம் செய்து தினமும் காலை மாலை அருந்தி வருவதால், உடலில் ரத்தம் சுத்தமாவதோடு, புத்துணர்ச்சியும் கூடுகிறது.

வயிற்று கடுப்பு நீங்குவதற்கு: அஜீரணக் கோளாறு ஏற்பட்டு, வயிற்று கடுப்பிற்கு ஆளாகுவோருக்கு, இக்கஷாயம் சிறந்த மருந்தாகும். மாதவிலக்கு நிற்கும் காலமான பெண்களுக்கு, அதிக மன உளைச்சல் ஏற்படும். அந்நேரத்தில் கை, கால், இடுப்பு மூட்டுக்களில் வலி உண்டாகிறது. இப்பிரச்னைகளுக்கும் மாதுளைப் பூ அரிய மருந்தாகும்.

பசியை தூண்டுவதில் மாதுளையின் பங்கு: வயிற்றில் வாயுப்பிரச்னையால் சிறிது சாப்பிட்டாலும் நிறைந்தது போல இருக்கும். அத்தகைய நிலையால், பசி என்பதே தோன்றாது. இதற்கு, மாதுளைப் பூ கஷாயத்துடன் பனை வெல்லம் கலந்து, அருந்தினால் உடனடியாக குணமடையும். இக்கஷாயத்தால், உடலில் ஏற்படும் வாதம், பித்தம், கபம் உள்ளிட்டவையும் சமநிலைபடுத்தப்படுகிறது. மாதுளைப் பூவின் சாற்றினை அருகம்புல் சாறுடன் கலந்து அருந்தினால், சிறு மூக்கு உடைவதால் ரத்தம் வடிவது குணமடையும்.

அலர்ட்: மாதுளம்பழத்தின் விதைகள் நன்கு சிவப்பாக காணப்பட வேண்டும் என்பதற்காக, சில வியாபாரிகள், சிவப்பு சாயத்தை சிரிஞ்சு வாயிலாக உள்ளே செலுத்தி, பழத்தை பிளந்து காண்பித்து விற்பனை செய்கின்றனர். பழம் வாங்கும்போது உஷாராக இருக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us