sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

'மூட்டு மாற்றியபின் சைக்கிளில் செல்லலாமா?'

/

'மூட்டு மாற்றியபின் சைக்கிளில் செல்லலாமா?'

'மூட்டு மாற்றியபின் சைக்கிளில் செல்லலாமா?'

'மூட்டு மாற்றியபின் சைக்கிளில் செல்லலாமா?'


PUBLISHED ON : ஏப் 20, 2014

Google News

PUBLISHED ON : ஏப் 20, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூட்டு மாற்று சிகிச்சை செய்து, இரு மாதங்களாகி விட்டது. நன்கு நடக்கிறேன். நான் மீண்டும் நெடுந்தூரம் சைக்கிள் பயணம் செய்ய விரும்புகிறேன். அதை செய்யலாமா?

மூட்டு மாற்று சிகிச்சையில் பொருத்தப்படும் செயற்கை மூட்டும், மெதுவாக தேய்மானம் அடையும் தன்மை கொண்டதாகும். மூட்டு அதிகம் உழைக்கும்போது, அந்த

தேய்மானமும் சற்று அதிகம் ஏற்படலாம். பொதுவாக, 20 ஆண்டுகளுக்கு பிரச்னை இல்லாமல் இருக்கக் கூடிய செயற்கை மூட்டுக்கு, சற்று விரைவாக பிரச்னைகள் வரும் வாய்ப்பு உண்டு. இதன் காரணமாக இயல்பான வேலைகளுக்கு சைக்கிள் ஓட்டுவது நல்லது. நெடுந்தூரம் செல்வது சரியல்ல.

எனக்கு ஆறு மாதங்களாக தோள்மூட்டு வலி உள்ளது. டாக்டர் தந்த 'டைக்ளோபெனாக்' என்ற மருந்தை உட்கொண்டபோது வலி குறைந்து, பின் மீண்டும் வந்துவிடுகிறது. மூட்டுமாற்று சிகிச்சை செய்யும்படி டாக்டர் கூறுகிறார். அதை தவிர்க்க, 'டைக்ளோபெனாக்' மருந்தை தினமும் எடுத்துக் கொள்ளலாமா?

'டைக்ளோபெனாக்' மருந்து தற்காலிக வலி நிவாரணி. மூட்டு மாற்று சிகிச்சை என்பது, நீண்டகால தீர்வு. மேலும் மேற்கண்ட மருந்து போன்ற வலி நிவாரணிகளால் பக்க விளைவுகள் உள்ளன. சகஜமாக வயிற்றுப்புண், சிறுநீரக கோளாறு, கல்லீரல் கோளாறு உண்டாகலாம். வலி அதிகமாக இருக்கும்போது ஓரிரு நாட்கள் எடுக்கலாம். தொடர்ந்து நீண்டநாள் எடுப்பது நல்லதல்ல.

என் வயது 62. இரு ஆண்டுகளாக, 'ருமாட்டாய்டு ஆர்த்ரைடிஸ்' என்ற மூட்டுவாத நோயால் கஷ்டப்படுகிறேன். ஒரு மாதமாக காலையில் எழும்பும் போது, ஆள்காட்டி விரல் மடங்கி நின்று விடுகிறது. ஒரு மணிநேரம் அதை தேய்த்துவிட்ட பின்னர் வலியுடன் நீட்ட முடிகிறது. நான் என்ன செய்வது?

உங்கள் விரலில் உள்ள தசை நாளத்தின் உறையில் வீக்கம் இருக்கலாம். 'ருமாட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்' நோய் உள்ளவர்களுக்கு இப்பாதிப்பு வரலாம். ஊசி, மருந்துகள் மூலம் தசை நாளத்தின் உறையில் உள்ள வீக்கத்தை குறைக்க முடியும். இதிலும் குறையாத சிலருக்கு, 'டிரிக்கர் ரிலீஸ்' என்ற ஒரு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்டால், இருவாரங்களில் முழுமையாக குணமடையலாம்.

டாக்டர் கே.என்.சுப்ரமணியன்,

மதுரை.






      Dinamalar
      Follow us