தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/உடலில் டேட்டூ வரையலாமா; டாக்டர் சொல்வதை படிங்க

உடலில் டேட்டூ வரையலாமா; டாக்டர் சொல்வதை படிங்க

உடலில் டேட்டூ வரையலாமா; டாக்டர் சொல்வதை படிங்க


PUBLISHED ON : ஆக 24, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 24, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிரந்தரமாக உடலில் எந்த பாகத்திலும், 'டேட்டூ' வரைந்து கொள்ள வேண்டாம் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் குமாரசாமி கூறியதாவது:

இன்றைய இளைஞர்கள் ஆண்களும் சரி, பெண்களும் சரி கழுத்து, கைகள், முதுகு, கால், மணிக்கட்டு போன்ற பகுதிகளில், 'டேட்டூ' வரைந்து கொள்கின்றனர்.

இது உடலினுள் நோய்க்கிருமிகளை எளிதாக நுழையச்செய்யும்; நோய் தொற்றையும் ஏற்படுத்தும்.

இது போன்று டேட்டூ வரைந்தவர்களிடமிருந்து நாம் ரத்தத்தை தானமாக பெறவோ, அவர்களுக்கு தானம் கொடுக்கவோ முடியாது.

ஏனென்றால், டேட்டூ வழியாக கிருமிகள் நுழைந்திருக்கும். தானம் செய்யும் போது குத்தப்படும் ஊசி வாயிலாக, மேற்பறத்தில் வரையப்பட்டுள்ள டேட்டூவிலுள்ள ரசாயனங்கள், உடலின் உள்ளே சென்று நோயை ஏற்படுத்தும்.

இதனால் தோலில், புற்றுநோய் கூட ஏற்படலாம்.

நிரந்தரமாக டேட்டூ வரைவதால், பல தொற்று வியாதிகளை வரவழைத்து விடும்.

நிரந்தரமாக உடலில் ஏதாவது ஒரு பகுதி, செயலிழந்து போகவும் கூடும்.

பெற்றோர்தான் பிள்ளைகளுக்கு எடுத்துக்கூறி, வழிநடத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us