PUBLISHED ON : மே 25, 2014

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கந்தசாமி, மதுரை: என் வயது, 54. கடந்த ஆறு மாதங்களாக தோள்பட்டை வலி உள்ளது. தோள்மூட்டின் சுற்றுப்பட்டை தசை கிழிந்துள்ளதால், பிசியோதெரபி செய்து வருகிறேன். விமான பயணம் மேற்கொள்ள உள்ளதால், கைச்சுமையை எடுத்துக் கொள்ளலாமா?
உங்கள் தோள்பட்டையின் சுற்றுப்பட்டை தசை கிழிந்து இருந்தால், நீங்கள் அந்தத் தோள்பட்டையின் உதவியால், எந்தவிதமான பளுவையும் தூக்கக் கூடாது. விமான பயணத்தில், கைச்சுமையை தூக்குவது சரியல்ல. பிசியோதெரபி பயிற்சி முறைகள் செய்து கொண்டே இருக்க வேண்டும். மூன்று மாதத்தில், முன்னேற்றம் தெரியும். அவ்வாறு இல்லையெனில், மூட்டு நுண்துளை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.

