தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/இதை செய்ய முடிகிறதா... நீண்ட ஆயுள் நிச்சயம்!

இதை செய்ய முடிகிறதா... நீண்ட ஆயுள் நிச்சயம்!

இதை செய்ய முடிகிறதா... நீண்ட ஆயுள் நிச்சயம்!


PUBLISHED ON : செப் 04, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 04, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வயது 50 முதல் 76 வரை உள்ளவர்கள், எந்த ஆதாரமும் இல்லாமல், ஒரு காலில் 10 வினாடிகள் நிலையாக நிற்க முடிந்தால், நீண்ட ஆயுளுடன் வாழ்வர் என்பது தெரிகிறது.

எழுந்து நின்று, இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நீட்டி, முடிந்தவர்கள் தலைக்கு மேலே கைகளை துாக்கவும் செய்யலாம். ஒரு காலை மடக்கி, அடுத்த காலின் உள்பக்கம் முழங்காலின் மேல் வைத்து, 'ஸ்ட்ரெய்ட்' டாக 10 வினாடிகள் நிற்க வேண்டும்; இதே போன்று, அடுத்த காலையும் மாற்றி செய்ய வேண்டும். தொடர்ந்து 10 நிமிடங்கள் நிற்க முடிந்தால், உடல் வலுவாக இருக்கிறது என்று கொள்ளலாம்.

இந்த ஆய்வில் பங்கு பெற்ற ஆயிரக்கணக்கானவர்களில், வெறும் 7 சதவீதம் பேரால் மட்டுமே இதை செய்ய முடிந்திருக்கிறது. தொடர்ந்து ஏழு ஆண்டுகள், 10 வினாடிகள், 'பேலன்ஸ்' செய்ய முடிந்தவர்களையும், மற்றவர்களையும் கண்காணித்ததில், 10 வினாடிகள் ஒரு காலில் பேலன்ஸ் செய்ய முடிந்தவர்கள், எந்தப் பிரச்னையும் இல்லாமல் வாழ்கின்றனர்.

மற்றவர்களுக்கு ஏதோ காரணத்தால் உடல் பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர்.

- 'பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் ஸ்போர்ட் மெடிசின்!'

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us