தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சீத்தா பழத்தால் சிக்கல்கள் தீரும்

சீத்தா பழத்தால் சிக்கல்கள் தீரும்

சீத்தா பழத்தால் சிக்கல்கள் தீரும்


PUBLISHED ON : மே 17, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 17, 2015


Follow on Google
அ நிறம் | அளவு

சீத்தா பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை என அனைத்தும், அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோஸ், சுக்ரோஸ் இருப்பதால், அதிக இனிப்புச் சுவையை தருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் டானிக்காக பயன்படுத்தப்படுகிறது; ரத்த உற்பத்தியை அதிகரித்து, உடலுக்கு வலிமை தருகிறது.

பழத்தில் வைட்டமின் சி, கால்சியம், நீர்ச்சத்து, மா சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார் சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை நிறைந்துள்ளன. சீத்தாப்பழ மரத்தின் இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது.

பழத்தோடு உப்பு கலந்து பருக்கள் மேல் பூசி வந்தால் அவை சரியாகும்; இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் புண் குணமாகும். விதைகளை பொடியாக்கி, பாசிப் பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்தால், முடி மிருதுவாகும்; பேன்கள் ஒழியும்.

பழத்தின் விதையை பொடி செய்து, கடலை மாவு, எலுமிச்சை சாறு கலந்து குளித்தால், முடி உதிர்வது குறையும்.

சிறிதளவு வெந்தயம், பாசிப் பயறு இரண்டையும் கலந்து, இரவு ஊற வைத்து பின், காலையில் அரைத்து, பொடி செய்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளித்தால் தலைமுடி குளிர்ச்சியாகும்; பொடுகு மறையும்.

சீத்தா பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்; சிறுவர்களுக்கு இப்பழத்தை அதிகளவில் கொடுத்தால், உடல் உறுதியாகும்; எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தா பழம், காய்ச்சலை குணப்படுத்தும்.

தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதயம் பலப்படும்; ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும். இப்பழம், தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கி, நினைவாற்றலை அதிகரிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us