sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

சிறிது தூரம் நடந்தாலே நெஞ்சுவலி ஏற்படுகிறதே...

/

சிறிது தூரம் நடந்தாலே நெஞ்சுவலி ஏற்படுகிறதே...

சிறிது தூரம் நடந்தாலே நெஞ்சுவலி ஏற்படுகிறதே...

சிறிது தூரம் நடந்தாலே நெஞ்சுவலி ஏற்படுகிறதே...


PUBLISHED ON : அக் 10, 2010

Google News

PUBLISHED ON : அக் 10, 2010


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.எஸ்.ஆறுமுகம், கோவை: 41 வயதான எனக்கு ரத்தப் பரிசோதனையில் எல்.டி.எல்., கொழுப்பின் அளவு 190ஆக இருந்தது. வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு 110 மி.கி., இருந்தது. எல்.டி.எல்., அளவை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

எல்.டி.எல்., என்பது  Low Density Lipoprotein என்ற வகை கொழுப்பு. இது ரத்தத்தில் உள்ள கொழுப்புகளில் மிகவும் கொடூர பாதிப்பை ஏற்படுத்தும் கெட்ட கொழுப்பு. இந்த எல்.டி.எல்., கொழுப்பின் அளவை குறைத்தால் ரத்த நாளங்களுக்கு பல வகைகளில் நன்மை ஏற்படும். ரத்தக்குழாய் நோய்களை தடுக்க இதன் அளவு 100 மி.கி., கீழ் இருந்தாக வேண்டும்.

மாரடைப்பு, பக்கவாதம் வந்தவர்களுக்கு மீண்டும் இந்த கொடூர நோய்கள் பாதிக்காமல் இருக்க, எல்.டி.எல்., அளவு 70 மி.கி.,க்கு கீழ் இருந்தாக வேண்டும். இந்த எல்.டி.எல்., அளவை குறைப்பதற்கு முதல் நடவடிக்கையாக வாழ்வியல் மாற்றங்களை கடைப்பிடிக்க வேண்டும். உணவில் எண்ணெய், உப்பு, சர்க்கரையின் அளவை குறைப்பது, மனதை நிம்மதியாக வைத்து இருப்பதுடன், தினமும் நடை பயிற்சியை மேற்கொள்வதும் அவசியம். மாத்திரை வகைகளில், 'ஸ்டேட்டின்' வகை மாத்திரைகள் எல்.டி.எல்., கொழுப்பின் அளவை குறைக்கும்.

நீங்கள் உங்கள் டாக்டரிடம் கலந்தாலோசித்து அவசியம், 'ஸ்டேட்டின்' வகை மாத்திரைகளை எடுப்பது முக்கியம். உங்களுக்கு வெறும் வயிற்றில் சர்க்கரையின் அளவு 110 மி.கி., இருந்தால் அது அதிகளவு தான். அதனால் நீங்கள் சர்க்கரை நோயாளிகளை போல, உணவு கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.

எஸ்.சிவானந்தன், பரமக்குடி: எனக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. அதற்காக, 'ஸ்டென்ட்' சிகிச்சை செய்யப்பட்டது. நான் மூன்று மாதங்கள் புகைப்பதை நிறுத்தி இருந்தேன். தற்போது மீண்டும் புகைப்பழக்கத்தை துவக்கி விட்டேன். இதனால் எனது இதயத்திற்கு பாதிப்பு ஏதும் வருமா?

புகைப்பழக்கம் உடலுக்கு பல வகைகளில் கொடூர தீங்குகளை விளைவிக்கிறது. குறிப்பாக திடீர் மாரடைப்பை ஏற்படுத்துகிறது. தற்போதுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி, ஒரு இதய நோயாளிக்கு புகைப்பழக்கத்தை நிறுத்தினால் கிடைக்கும் பலன், ஒரு, 'ஆஞ்சியோபிளாஸ்டி' அல்லது பை-பாஸ் அறுவை சிகிச்சையில் கிடைக்கும் பலனை விட அதிகமாக இருக்கும்.

நீங்கள் மீண்டும் புகைப்பிடிக்க ஆரம்பித்து இருப்பது நீங்கள் மறுபடியும் மாரடைப்பை இருகை நீட்டி அழைப்பதை போல உள்ளது. அதனால் நீங்கள் உடனடியாக புகைப்பழக்கத்தை அறவே நிறுத்தியாக வேண்டும்.

ஆர்.ரத்தினசாமி, திண்டுக்கல்: எனக்கு ஆறு மாதங்களாக ரத்தக்கொதிப்பு உள்ளது. இதற்காக Amlodipine  மற்றும் Atorva Statin மாத்திரைகளை எடுத்து வருகிறேன். தற்போது எனது இரு கால்களிலும் வீக்கம் ஏற்படுகிறது. நான் என்ன செய்வது?

தற்போதுள்ள ரத்தக்கொதிப்பு மாத்திரைகளில் Amlodipine  மிக நல்ல மாத்திரை. இது ஒரு சிலருக்கு காலில் வீக்கத்தை ஏற்படுத்தும் தன்மை உள்ளது. இதை கண்டு பயப்படத் தேவையில்லை. இந்த மாத்திரையை நிறுத்திவிட்டு, அதற்கு பதில் Telmisartan  போன்ற வேறு நல்ல ரத்தக்கொதிப்பு மாத்திரைகளை எடுத்து கொள்ளலாம்.


ஜெரால்டு, வக்கம்பட்டி: எனக்கு சிறிது தூரம் நடந்தாலே நெஞ்சுவலி ஏற்படுகிறது. ஆனால், 'டிரெட்மில்' பரிசோதனை, 'எக்கோ கார்டியோகிராம்' பரிசோதனை செய்து பார்த்ததில், நார்மலாகவே உள்ளது. எனக்கு வேறு ஏதும் பரிசோதனைதேவைப்படுமா?

சிறிது தூரம் நடந்தாலே நெஞ்சுவலி ஏற்பட்டால் அது இதய நோயின் அறிகுறியே.

பொதுவாகவே நெஞ்சுவலி ஏற்பட்டவருக்கு, 'டிரெட்மில்' பரிசோதனை செய்து பார்த்தால் மாறுதல் ஏற்படும். ஒரு சிலருக்கு, 'டிரெட்மில்' பரிசோதனையில் வெளிப்படாமலும் இருக்கலாம். எனவே, 'ஆஞ்சியோகிராம்' பரிசோதனையை அவசியம் செய்தாக வேண்டும்.

இதில் உங்கள் இருதயத்தின் ரத்தநாளங்களில் அடைப்பு உள்ளதா, இல்லையா, அடைப்பு இருந்தால் எந்த இடத்தில், எத்தனை சதவீதம் உள்ளது என்பதை கண்டறியலாம். அதற்கேற்ப சிகிச்சை முறையை மேற்கொள்வது நல்லது.

- டாக்டர் சி.விவேக்போஸ்,  மதுரை






      Dinamalar
      Follow us