sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/நோய்களை தீர்க்கும் சின்ன வெங்காயம்

நோய்களை தீர்க்கும் சின்ன வெங்காயம்

நோய்களை தீர்க்கும் சின்ன வெங்காயம்


PUBLISHED ON : பிப் 24, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 24, 2015


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெயர் சின்ன வெங்காயம் என்று இருந்தாலும், பெரிய நோய்களை தீர்க்கும் அரிய மருத்துவ குணம் சின்ன வெங்காயத்தில் உள்ளது. 50க்கும் மேற்பட்ட நோய்களை போக்கும் சஞ்சீவியாக சின்ன வெங்காயம் பலன் தருகிறது. வெங்காயத்துடன் வெல்லத்தைச் சேர்த்து

அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில் விட்டால் காது இரைச்சல் மறையும்.

வெங்காய நெடி தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல்

வைத்து கட்டினால், கட்டிகள் உடனே பழுத்து உடையும். வெங்காய சாற்றை மோரில் கலந்து குடித்தால், இருமல் குறையும். வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச்சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வந்தால்

பல்வலி, ஈறுவலி குறையும்.

வெங்காயத்தை சமைத்து சாப்பாட்டில் சேர்த்துக்கொண்டால் உடல் வெப்பநிலை சமநிலை பெறும், மூலச்சூடு தணியும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால், நரம்புத் தளர்ச்சி குணமாகும். வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்ட

பின், பசும் பால் குடித்தால் ஆண்மை பெருகும். வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால், சீதபேதி நிற்கும். வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

வெங்காயத்தில் குறைந்த கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயம் சாப்பிடலாம். வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த

சக்தியை மீட்கும். தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் 3 வேளை சாப்பிட்டால் நுரையீரல் சுத்தமாகும்.

வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலிக்கு, வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய்யை கலந்து தடவினால், வலி நீங்கும். நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும். வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி

குடித்தால் மாலைக்கண் நோய் சரியாகும். வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட்டால் தொண்டை வலி குறையும். பாம்பு கடிக்கு, நிறைய வெங்காயம் தின்றால் விஷம் இறங்கும். வெங்காய சாற்றை தண்ணீரில் கலந்து பருகினால் சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

வெங்காயம், சோடா உப்பு இரண்டையும் சேர்த்து, அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவினால், நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை கலந்து குடித்தால் மூலநோய் குணமாகும். சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது.

நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம். தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து, வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இருதுண்டாக நறுக்கி தேய்த்த்தால் முடி வளரும்.

காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு குடித்து வந்தால் வலிப்பு குறையும். வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் டி.பி.நோய் குறையும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் வாதநோய் குறையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us