தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/நாள்பட்ட சோர்வா? அலட்சியம் வேண்டாம்!

நாள்பட்ட சோர்வா? அலட்சியம் வேண்டாம்!

நாள்பட்ட சோர்வா? அலட்சியம் வேண்டாம்!


PUBLISHED ON : ஜூலை 15, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 15, 2015


Follow on Google
அ நிறம் | அளவு

'என்னன்னு தெரியலே; ஒரே தூக்கமா வருது; வேலை செய்யவே முடியல, சோம்பேறித்தனமா இருக்கு...' என, பலர் கூறுவதை கேட்டிருப்போம். அதற்கு என்ன காரணம்?

இந்த சோம்பேறித்தனத்திற்கு, ரத்தசோகையும் ஒரு வகையில் காரணமாக இருக்கலாம். உங்கள் உடலில், ரத்தம் குறைவாக இருந்தால், மயக்கம் வரும் மற்றும் உடல்திறன் குறைவாகிவிடும். தைராய்டு நோய் உருவாகும்போது, இதுபோன்ற சோம்பேறித்தனமும், தூக்க நிலையும் ஏற்படும். எனவே, இந்நிலை தோன்றினால், உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.நீரிழிவு நோய் இருந்தால், அடிக்கடி மயக்கமும், தூக்க நிலையும், சோம்பேறித்தனமாகவும் உணர்வீர்கள்.

மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால், இதுபோல் உணர அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன. தற்போதைய நிலையில், ஐ.டி., துறையில் பணிபுரியும் பலருக்கு, இந்த பாதிப்பு ஏற்படுகிறது. முடக்கு வாதம், இது மிக சிலருக்கே ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

முடக்கு வாதத்திற்கான அறிகுறியாக, மயக்கம் வருவதும், எப்போதும் தூங்கி விழுவதும் காரணமாக சொல்லப்படுகின்றன. எனினும், 50 வயதை எட்டும் நபர்கள் அதுபோல் உணர்ந்தால், தகுந்த மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நலம். நாள்பட்ட சோர்வு, ஒருவேளை இந்த சோம்பேறித்தனத்தோடு, தலைவலி, உடல் சோர்வு, உடல்திறன் குறைவு போன்றவை இருந்தால், நாள்பட்ட சோர்வால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே, நன்கு, அமைதியாக ஓய்வெடுப்பது, மிக மிக அவசியம்.

- டாக்டர் ராஜேந்திரன்,

பொதுநல மருத்துவர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us