தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/இருதய நோயாளிக்கு தேங்காய் நல்லதல்ல

இருதய நோயாளிக்கு தேங்காய் நல்லதல்ல

இருதய நோயாளிக்கு தேங்காய் நல்லதல்ல


PUBLISHED ON : ஜன 16, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 16, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.ராமகிருஷ்ணன், மதுரை : நமக்கு ரத்தக் கொதிப்பு உள்ளது என்பதை எவ்வித அறிகுறிகள் மூலம் அறியலாம்?

பொதுவாக நமது ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவில் இருந்தாக வேண்டும். இந்த அளவு கூடும்போது, அதாவது 140/90 என்பதை தாண்டும்போது அதை ரத்தக் கொதிப்பு Hyper tension என்பர். இந்த வியாதி உள்ள பலருக்கு அறிகுறியே இல்லாமல் இருக்கலாம். எனவே அதை சைலன்ட் கில்லர் என்றும் குறிப்பிடுவர். மற்றும் சிலருக்கு ரத்த அழுத்தம் சிறிதளவு கூடினாலே தலைவலி, தலைச்சுற்றல், தலைபாரமாக இருத்தல், மயக்கம் ஏற்படலாம். ரத்தக்கொதிப்பு கூடும்போது, உடலின் முக்கிய பாகங்களான மூளை, சிறுநீரகம், இருதயம், கண்களில் பெருமளவு பாதிக்கலாம். இதனால் இதற்குரிய அறிகுறிகளான பக்கவாதமோ, நெஞ்சுவலியோ, மூச்சுத் திணறலோ, கண்பார்வை மங்குவதோ, கால்வீக்கம் உட்பட பல வகைகளில் தென்படலாம். இதில் முக்கியமானது என்னவென்றால், இந்த வியாதியின் சிகிச்சையே இந்த உள்ளுறுப்பின் பாதிப்பை தவிர்ப்பதே. எனவே எந்த வயதிலும், எந்த நேரத்திலும் ரத்தஅழுத்தம் 120/80 என்ற அளவில் இருந்தாக வேண்டும். இதற்கு முதலில் வாழ்வியல் முறை மாற்றமே அத்தியாவசியமானது. அதாவது மனதை நிம்மதியாக வைத்திருப்பது, உணவில் உப்பு, சர்க்கரை, எண்ணெயை குறைத்துக் கொள்வது, தினமும் நடைப் பயிற்சி முக்கியமானது.

இவை எல்லாம் செய்தும் ரத்த அழுத்தம் குறையவில்லை என்றால் அவசியம் மருந்து தேவைப்படும். தற்போது ரத்தக்கொதிப்புக்கு பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகள் உள்ளன. எனவே இந்த நோயை பொறுத்தவரை அறிகுறி வரும்வரை தாமதிக்காமல் ரெகுலராக, ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து, அதற்கேற்ப நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது முக்கியம்.

வி.ராமசாமி, அருப்புக்கோட்டை : ~ Echo பரிசோதனை அறிக்கையில், 'Moderate L.V., Systolic Dysfunction என்பது எதை குறிக்கிறது?

எக்கோ பரிசோதனையில் இருதயத்தின் Left Ventricle E.F Ejection Fraction என்ற அளவீடு நார்மலாக 60 ஆக இருக்க வேண்டும். இந்த பம்பிங் திறன் பல வியாதிகளால் குறைகிறது. அதாவது ரத்தக்குழாய்களில் அடைப்பு, இருதய தசை வியாதி, வால்வுகளில் கோளாறு, பிறவியில் ஏற்படும் இருதய குறைபாடுகள், ரத்தக்கொதிப்பு முக்கியமானவை. இதன் அளவு சற்று குறைந்தால் Mild எனவும், பெரியளவில் குறைந்தால் Severe எனவும், நடுத்தரமாக குறைந்தால் Moderate எனவும் கூறுவர். இப்பம்பிங் திறன் எதனால் குறைந்தது என்பதை பொறுத்து சிகிச்சை முறை அமையும்.

கே.சுகுமாறன், கோவை : கொட்டைகள் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

தற்போதுள்ள மருத்துவ வழிகாட்டுதல்படி இருதயத்திற்கு பலனளிப்பது தெரிய வந்துள்ளது. Nutsல் Omega3 Fattyacids, LArginine, Unsaturated Fats, Fiber, VitaminE போன்றவை உள்ளன. இதனால் மாரடைப்பு ஏற்படும் தன்மை ஓரளவு குறைவதும் தெரிய வந்துள்ளது. இதில் முக்கியமானது என்னவென்றால் கொட்டைகளில் 80 சதவீதம் கொழுப்பும் உள்ளதால் கலோரி அளவும் அதிகம். எனவே சிறிதளவாக எடுப்பது முக்கியம். பாதாம் பருப்பு, வேர்க்கடலை, வால்நட்ஸ் போன்றவற்றை சிறிதளவு எடுத்தால் ஓரளவு இருதயத்திற்கு பலனளிப்பது தெரியவந்துள்ளது. Coconut தேங்காய் nut வகை அல்ல. தேங்காய் சார்ந்த பொருட்களை எடுப்பதும் இருதயத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் இதில் Saturated Fat அதிகம் உள்ளது.

ஆர். பாஸ்கரதாஸ், திண்டுக்கல் : வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு 112 மி.கி., என வந்துள்ளது. இது நார்மல் அளவா?

வெறும் வயிற்றில் சர்க்கரையின் அளவு 100 மி.கி.,க்கு கீழ் இருக்க வேண்டும். 112 என்பது அதிகளவுதான். இதை Impaired Fasting Glucose (I.F.G) என்று கூறுவர். இது சர்க்கரை நோயின் அறிகுறியே. நீங்கள் உடனடியாக சர்க்கரை நோயாளிக்குரிய உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். அத்துடன் உடற்பயிற்சி செய்வதும் அவசியம். இத்துடன் சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பின் உங்கள் சர்க்கரை அளவை கண்டறிய வேண்டும். அதுமட்டுமின்றி HbA1c (Glycosylated) அளவையும் கண்டறிவது முக்கியம்.

- டாக்டர் விவேக்போஸ், மதுரை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us